TamilSaaga

சிங்கப்பூர் PCM வேலைக்கு தேவையான Skills: விண்ணப்பிப்பது எப்படி?

சிங்கப்பூர், வெளிநாட்டுத் தொழிலாளர்கள் வேலை தேடிச் செல்லும் நாடுகளில் மிகவும் விரும்பப்படும் ஒன்று. அங்கு பலவிதமான வேலைகள் இருப்பதனால், அதற்கு ஏற்றவாறு பல வகையான வேலை அனுமதிகளும் (Work Passes) உள்ளன.

முக்கியமான வேலை அனுமதிகள்:

 

  • Employment Pass: இது உயர்கல்வி படித்தவர்களுக்கு வழங்கப்படும் வேலை அனுமதி. இதில் சம்பளம் பொதுவாக அதிகமாக இருக்கும்.
  • S-Pass: கல்வித் தகுதி சற்று குறைவாக இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட துறையில் சிறப்புத் திறன் உள்ளவர்களுக்கு இந்த அனுமதி வழங்கப்படும்.
  • EntrePass: சொந்தமாகத் தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கானது.

இவை தவிர, படித்தவர்கள் மற்றும் படிக்காதவர்கள் என இருவருமே அதிகம் விண்ணப்பிக்கக்கூடிய வேலை அனுமதிகளாக PCM (Process Construction and Maintenance) மற்றும் திறன் சார்ந்த (Skill) வேலை அனுமதிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

PCM என்றால் என்ன?

PCM என்பது ‘Process Construction and Maintenance’ என்பதன் சுருக்கமாகும். இது சிங்கப்பூரில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் உற்பத்தித் துறைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கான ஒரு சிறப்பு வகையான வேலை அனுமதி.

இந்த PCM பணி அனுமதி பெற்றவர்கள், தொழிற்சாலைகளைக் கட்டுவது, தொழிற்சாலை இயந்திரங்களைப் பராமரிப்பது, மற்றும் தொழிற்சாலைகளில் நடக்கும் உற்பத்தி வேலைகளில் ஈடுபடுவது போன்ற பணிகளைச் செய்வார்கள்.

2025-ல் சிங்கப்பூர் PSA நிறுவனத்தில் வேலை வாய்ப்பு….எப்படி விண்ணப்பிப்பது? முழு விவரம்

PCM வேலைகளின் சிறப்பு:

PCM வேலைக்காக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள், சில குறிப்பிட்ட வேலைகளை மட்டுமே செய்ய முடியும். அவர்கள் தொழிற்சாலையின் இயந்திரங்களை இயக்குவது, பொருட்களைப் பாதுகாப்பது (கிடங்கு வேலை), பொருட்களைப் பெட்டிகளில் அடைப்பது (பேக்கிங்) போன்ற வேலைகளைச் செய்ய முடியாது.

அதேபோல், தொழிற்சாலையைச் சுற்றி புல் வெட்டுவது, அலுவலகங்களைச் சுத்தம் செய்வது, சாலைகளைச் சீர் செய்வது, குப்பைகளை அகற்றுவது போன்ற வேலைகளிலும் ஈடுபட முடியாது.

அவர்கள் தொழிற்சாலை இயந்திரங்களைக் கட்டுவது, அவற்றைப் பழுது பார்ப்பது, அல்லது அவை பழுதடையாமல் தடுக்கும் பராமரிப்பு வேலைகள் போன்ற குறிப்பிட்ட வேலைகளை மட்டுமே செய்ய முடியும். இந்த வேலைகளுக்கு தனியான திறமையும் அனுபவமும் தேவை.

PCM ஒப்பந்ததாரர்களின் வேலை:

இந்த சிறப்பு வேலைகளை PCM ஒப்பந்தக்காரர்கள் (contractors) செய்வார்கள். இவர்கள், தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் பெரிய கட்டுமான நிறுவனங்களுடன் சேர்ந்து, தொழிற்சாலைகளின் உற்பத்திப் பிரிவுகளைக் கட்டி, பராமரிப்பார்கள்.

PCM பணிகளுக்கு இந்த 13 (Skills) திறன் தொகுப்புகள் தேவை:

  • Electrical and Instrumentation works
  • General fitting
  • Machine fitting
  • Metal Scaffolding
  • Painting and blasting
  • Plant civil works
  • Plant equipment fitting
  • Process pipefitting
  • Refractory
  • Rigging and material handling
  • Rotating equipment fitting
  • Thermal insulation
  • Welding

வயது வரம்பு:

சிங்கப்பூரில் PCM வேலை அனுமதி பெற விரும்பும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இந்த வயது வரம்புகளுக்குள் இருக்க வேண்டும்:

  • குறைந்தபட்ச வயது: 18 வயது
  • அதிகபட்ச வயது: விண்ணப்பிக்கும்போது 50 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

பொதுவாக, PCM வேலை அனுமதிக்கு ஏஜென்சிகள் (நிறுவனங்கள்) மூலமாக விண்ணப்பிப்பது வழக்கம். இந்த ஏஜென்சிகள், எப்படி விண்ணப்பிப்பது, என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும் போன்ற விஷயங்களை உங்களுக்கு விளக்குவார்கள்.

சிங்கப்பூர் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் (Ministry of Manpower – MOM) இணையதளத்திலும் இந்த வேலை அனுமதி பற்றிய அனைத்து விவரங்களையும் நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.

சாங்கி விமான நிலையத்தில் திருட்டு – இரு இந்திய பெண்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனை!

சிங்கப்பூரில் வேலை செய்ய நினைக்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள், அந்த நாட்டின் விசா விதிகள், வேலைவாய்ப்புச் சந்தை எப்படி இருக்கிறது, மற்றும் பிற சட்டதிட்டங்கள் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்வது மிகவும் முக்கியம்.

Related posts