TamilSaaga
Migrant Workers

Dormitoryயில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் – உடல் நலனை பாதுகாக்க புதிய ஆய்வை மேற்கொள்ளும் சிங்கப்பூர்..!

கடந்த பல ஆண்டுகளாக புவி வெப்பமயவந்தால் நிலவும் வரலாறு காணாத வெப்பநிலை மாற்றம் மற்றும் கடுமையான வெப்ப அலைகள், உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் அதிக கவனம் செலுத்தும் ஒரு பிரச்சினையாக வெப்பத்தை உருவாக்கியுள்ளன. நமது சிங்கப்பூரும் அந்த விஷயத்திற்கு விதிவிலக்கல்ல.
எடுத்துக்காட்டாக, சிங்கப்பூர், பல்வேறு துறைகளுக்கான தேசிய வெப்ப ஆலோசனை மற்றும் வெப்ப அலை மறுமொழித் திட்டங்களை வெளியிட்டுள்ளது.

வெப்ப-பிரதிபலிப்பு வண்ணப்பூச்சு 2030ம் ஆண்டுக்குள் அதிகமான HDB தொகுதிகளை பூசப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதே நேரம் சிங்கப்பூர் விஞ்ஞானி ஒருவர் தற்பொழுது வெளியிட்டுள்ள ஆய்வுகளின் முடிவில், சிங்கப்பூர் குடிமக்களை தாண்டி பிற நாடுகளில் இருந்து இங்கே வந்து பணி செய்யும் தொழிலாளர்கள் நலம் காத்திட பல முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

சிங்கப்பூரை பொறுத்தவரை அனைவருமே ஏசி பூட்டப்பட்ட அறையில் வேலை பார்ப்பது இல்லை. அதை மீறி கடும் வெயிலை சமாளித்து பணி செய்பவர்கள் பலர் இருக்கின்றனர். குறிப்பாக வெளிப்புறங்களில் வேலை செய்பவர்கள், நடைபாதை வியாபாரிகள், டெலிவரி வேலை செய்பவர்கள், மருத்துவமனையில் குளிர்சாதன வசதி இல்லாத இடங்களில் பணி செய்பவர்கள் இன்று பலருக்கும் உதவும் வகையில் தன்னுடைய ஆராய்ச்சி இருக்கும் என்று அவர் கூறியிருக்கிறார்.

வெளிநாட்டு ஊழியர்களின் டார்மிட்டரிகள்

பணியாளர்கள் கடும் வெயிலில் பணி செய்வது ஒருபுறம் என்றால், சிங்கப்பூரில் வெப்ப அலை வீசும் காலகட்டத்தில் தங்களுடைய டார்மிட்டரிகளில் உறங்கும் தொழிலாளர்களுக்கு அது மிக கடுமையான இரவுகளாக மாறி வருகின்றது. தொடர்ச்சியாக மாறிவரும் கால சூழலை இதற்கு அதிக காரணம் என்றும் நிச்சயம், இவை அனைத்திற்கும் தீர்வு காணும் வண்ணம் ஆராய்ச்சிகள் செய்யப்படும் என்றும் கூறியிருக்கிறார்.

“புகைபிடித்த அவரை மட்டும் ஏன் தண்டிக்கவில்லை” – சாங்கி ஏர்போர்ட்டில் இந்திய வம்சாவளி அதிகாரிகளிடம் வாதிட்ட நபர்..!

“சமீப ஆண்டுகளாக, வெப்ப அழுத்தம் முக்கியமாக நமது பணியாளர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு ஒரு சவாலாகக் கருதப்படுகிறது. வெப்பம் என்பது முழு அரசாங்கப் பிரச்சினையாகும் என்ற விழிப்புணர்வு அதிகமாக இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று NUS மனித ஆற்றல் மொழிபெயர்ப்பு ஆராய்ச்சி திட்டத்தின் துணைத் தலைவரான பேராசிரியர் லீ கூறினார்.

Related posts