TamilSaaga

கொஞ்சம் அசந்தாலும் மரணம்.. சிங்கப்பூரில் தகுதியற்ற ஊழியர் இயக்கிய கனரக வாகனம் – “திருந்தவே மாட்டீங்களா?” என்று விளாசிய அதிகாரிகள் – இரு நிறுவனங்களுக்கு தடை!

சிங்கப்பூரில் பணியிடத்தில் இறக்கும் அல்லது படுகாயம் அடையும் ஊழியர்களின் எண்ணிக்கை கடந்த 2021 ஆண்டை விட அதிகரித்து, ஜெட் வேகத்தில் சென்றுக் கொண்டிருக்கிறது.

அதாவது, இந்த ஆண்டு மட்டும் சிங்கப்பூரில் 37 ஊழியர்கள் பணியிடத்தில் ஏற்பட்ட விபத்தில் பலியாகியுள்ளனர். சமீபத்தில் கூட கடந்த புதன்கிழமை (அக்.5) அன்று Hougang 1 ஷாப்பிங் மாலில் உள்ள loading bay-ல் லாரி ஒன்று மோதியதில் 69 வயது மதிக்கத்தக்க கிளீனர் உயிரிழந்தது நினைவிருக்கலாம்.

இதனால், சிங்கப்பூர் அரசு நிறுவனங்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. பணியிடத்தில் அனைத்து பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும், இனிமேல் ஒரு ஊழியருக்கு கூட இறப்போ, காயமோ ஏற்படக் கூடாத வகையில் கவனமுடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது.

இதற்காக சில பணியிட கட்டுப்பாடுகளும் நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, சிங்கப்பூரில் உள்ள நிறுவனங்களுக்கு சிங்கை மனிதவளத்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.

அந்த வகையில், தற்போது இரு நிறுவனங்களை ஆய்வு செய்த அதிகாரிகள், அங்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவியதால், அந்நிறுவனங்கள் இயங்க தடை விதித்துள்ளனர்.

மேலும் படிக்க – நள்ளிரவு நேரம்.. எதிர்பாராத சம்பவம்.. சிங்கப்பூரில் இருக்கையில் சிக்கியபடியே உயிரிழந்து கிடந்த ஊழியர் – ஞாயிறு அன்று என்ன நடந்தது?

இதுகுறித்து மனிதவளத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த ஜூன் 23, 2022 அன்று நடத்தப்பட்ட சோதனையில் Soon Bee Huat Trading Pte Ltd எனும் நிறுவனத்தில் நிறைய பாதுகாப்பற்ற சூழல் இருப்பது கண்டறியப்பட்டது. அதுபோல், ஆகஸ்ட் 16, 2022 அன்று DA Engineering Pte Ltd நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையில், எண்ணற்ற பாதுகாப்பு இல்லாத சூழல் இருப்பது கண்டறியப்பட்டது.

அதவாது,

1, கனரக இயந்திரங்களை அங்கீகரிக்கப்படாத பணியாளர்கள் கொண்டு இயக்கியது. அதாவது, அங்கீகாரம் இல்லாத டிரைவர்கள் கனரக வாகனங்களை இயக்கியுள்ளனர்.
2, பாதுகாப்பற்ற இயந்திரங்கள்
3, அதிக எடை கொண்ட பொருட்களை ரேக்குகளில் வைத்திருத்தல்,
4, சரியான பராமரிப்பு இல்லாமை

போன்ற நான்கு காரணங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

இதையடுத்து இரண்டு நிறுவனங்கள் உடனே தங்கள் பணிகளை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இரு நிறுவனங்களுக்கும் முறையே $15,000 மற்றும் $8,000 அபராதம் விதிக்கபப்ட்டுள்ளது.

இந்த நடவடிக்கை குறித்து விரிவாக அறிக்கை வெளியிட்டுள்ள மனிதவளத்துறை அமைச்சகம், “ஒரு நிறுவனத்தின் தலைமை நிர்வாகிகள் மற்றும் இயக்குநர்கள், அந்நிறுவனத்தின் பணியிட பாதுகாப்பிற்கு பொறுப்பேற்க வேண்டும். மேலும் மோசமான நிலைமைகள் நிலவினால் அதற்கு அவர்களே பொறுப்பேற்க வேண்டும். அதே நேரத்தில், தொழிலாளர்கள் அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளையும் பின்பற்ற வேண்டும். உங்கள் நிறுவனங்களில் பாதுகாப்பற்ற பணியிட சூழல் இருப்பதை கண்டால், மனிதவளத்துறையிடம் புகார் அளிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” தளத்தை பின்தொடருங்கள்

Related posts