TamilSaaga

இந்தியாவின் UPI சேவை.. மனதார பாராட்டிய நம்ம சிங்கப்பூர் அமைச்சர் சண்முகரத்தினம் – வைரலாகும் வீடியோ

அண்டை நாடான இந்தியாவில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் UPI (Unified Payment Interface) குறித்து நமது சிங்கப்பூரின் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகம் பாராட்டியுள்ளது இந்தியாவில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.

இதனையடுத்து நமது அமைச்சர் தர்மன் சண்முகத்தின் அந்த உரையை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு பல நிகழ்வுகளை பகிர்ந்துகொண்டுள்ளார் பாஜக கட்சியின் தேசிய செயலாளர் சத்ய குமார் அவர்கள்.
நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த ஜூலை 1, 2015 அன்று டிஜிட்டல் இந்தியா திட்டத்தை அறிமுகம் செய்தது.

இந்நிலையில் அந்த திட்டத்தை பலர் விமர்சனம் செய்துவரும் இந்த நேரத்தில் நமது சிங்கப்பூர் அமைச்சர் அதை புகழ்ந்துள்ளது அக்கட்சியினரிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதுகுறித்து சத்ய குமார் வெளியிட்ட பதிவில்..

Exclusive : சிங்கப்பூரில் உயிரிழந்த தமிழக தொழிலாளி ராஜேந்திரன்.. நிராதரவாக நிற்கும் குடும்பம் – உதவி கேட்டு மனைவி வெளியிட்ட உருக்கமான வீடியோ

“சிதம்பரம் போன்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் UPIயை கேலி செய்வதில் மும்முரமாக இருக்கும்போது, ​சிங்கப்பூரின் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்தினம், “உலக அளவில், இவ்வளவு வேகத்திலும், அளவிலும் எந்த நிதி கண்டுபிடிப்பும் சாதிக்கவில்லை” என்று அவர் கூறியுள்ளார்.

ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் என்ற நிகழ்வில் உரையாற்றிய நமது சிங்கப்பூர் அமைச்சர், 29 வெவ்வேறு மாநிலங்களைக் கொண்ட வெவ்வேறு ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களைக் கொண்ட ஒரு நாட்டிற்கு இது ஒரு மகத்தான சாதனை என்றும் கூறினார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts