சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் சில தொழிலாளர் நலசங்கல்கள், இங்கு பணியாற்றி வரும் சில வெளிநாட்டு ஊழியர்கள் மீது சில குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். நேற்று சிங்கப்பூர் மனிதவ அமைச்சகம், NTUC மற்றும் சில தொழிலாளர் சங்கங்கள் நடத்திய கூட்டத்தில் இந்த புகார் முன்வைக்கப்பட்டுள்ளது.
டெலிவரி வேலை செய்யும் வெளிநாட்டினர்
பிற நாடுகளில் இருந்து பல்லவேறு வேலைக்காக, பல்வேறு பாஸ்களில் பணியாளர்கள் இங்கு வேலைக்கு வருகின்றனர். ஆனால் வெகு சிலர் இங்கு சட்டவிரோதமாக கூடுதல் வேலைகளை செய்து வருவதாக நேற்று நடந்த அந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.
PAP கட்சியின் Yeo Wan Ling தனது முகநூலில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். அதில்…
“NTUC மற்றும் எங்கள் பிளாட்ஃபார்ம் தொழிலாளர் சங்கங்கள் (PWAs), நேற்று மனிதவள அமைச்சகம், போக்குவரத்து அமைச்சகம் மற்றும் Grab சிங்கப்பூர் ஆகியவற்றின் மூத்த மட்ட பிரதிநிதிகளுடன் பிளாட்ஃபார்ம் தொழிலாளர்கள் முத்தரப்பு பணிக்குழுவின் முதல் கூட்டத்தில் ஒரு வலுவான மற்றும் பயனுள்ள கலந்துரையாடலை நடத்தினோம்.
தங்கள் கவலைகளை எங்களுடன் பகிர்ந்து கொண்ட எங்கள் பிளாட்ஃபார்ம் தொழிலாளர்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி. எங்களால் உங்கள் கஷ்டங்களை புரிந்துகொள்ளமுடிகிறது, நிச்சயம் உங்களுக்காக நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம்.
நீங்கள் எழுப்பிய ஒரு முக்கிய பிரச்சினை என்னவென்றால், வெளிநாட்டினர் சட்டவிரோதமாக டெலிவரி வேலையை சிங்கப்பூரில் மேற்கொள்வது தான். இது உங்கள் வருவாயை நேரடியாக பாதிக்கிறது. நிச்சயம் இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுப்போம்” என்று அவர் அந்த பதிவில் கூறியுள்ளார்.