சிங்கப்பூரில் வேலை செய்தால் வாழ்க்கை செட்டில் ஆகிவிடும் என்ற நம்பிக்கையில் தான் இளைஞர்கள் தினமும் இங்கு படையெடுத்து வெவ்வேறு நாடுகளில் இருந்து வந்தவண்ணம் இருக்கின்றனர். அப்படி இருந்தும் சிலர் டெஸ்ட் முடித்து ரிசல்ட் வாங்கி சிங்கப்பூர் வராததால் கடந்த சில மாதங்களாக இங்கு கோட்டா பிரச்னை நிலவி வருகிறது.
இதனால் சிங்கப்பூர் செல்ல உண்மையிலேயே விரும்பும் சிலரால் சரியான நேரத்தில் கிளம்ப முடியாமலோ ப்ளைட் ஏற முடியாமலோ தத்தளித்து வருகின்றனர். இந்நிலையில் skill ஊழியர்களின் தேவை சிங்கப்பூரில் அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
இதையும் படிங்க: சிங்கப்பூரின் மிகப்பெரிய வங்கியான DBS சேவை முடங்கியது… பண பரிவர்த்தனை செய்ய முடியாமல் வாடிக்கையாளர்கள் திண்டாட்டம்!
மனிதவள அமைச்சர் டாக்டர். டான் சீ லெங், குறைந்த ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு ஆதரவாக அவர்களை மேம்படுத்துவதற்கும் வலுப்படுத்துவதற்கும் சிங்கப்பூரின் அணுகுமுறையின் முக்கிய பகுதிகளை தெரிவித்து இருக்கிறார். குறைந்த ஊதியத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதியத்தை உயர்த்துவதற்கும், Skill ஊழியர்கள் இன்னும் தங்களை மேம்படுத்தி நல்ல ஊதியத்தினையும் பெற்று பணிக்களில் சிறந்து விளங்க முக்கிய தூண்களாக இருந்து அரசாங்கம் தொடர்ந்து செயல்படுத்தும் என்றார்.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய, உற்பத்தித்திறனுடன் இணைந்து, குறைந்த ஊதியம் பெறும் ஊழியர்களின் வருமானத்தை உயர்த்த progressive wage approach அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வழியில், ஊழியர்கள் பயிற்சி மற்றும் உற்பத்தித்திறன் மற்றும் skill வளர்ச்சியுடன் அவர்களின் ஊதியம் உயரும் என்ற தெளிவான வாழ்க்கைப் பாதையிலிருந்து பயனடைகிறார்கள். மறுபுறம், முதலாளிகள் தங்கள் ஊழியர்களின் அதிக உற்பத்தித்திறன் மற்றும் Skillகளால் பயனடைகிறார்கள். சேவை வாங்குபவர்கள் மற்றும் நுகர்வோர் சிறந்த சேவையையும் மற்றும் தரத்தை அனுபவிக்கின்றனர்.
இதையும் படிங்க: டிப்ளமோ படித்துவிட்டு சிங்கப்பூர் வரப்போறீங்களா? உங்களுக்கு கண்டிப்பா தங்க கம்பளம் தான்… சம்பளம் கூட $3000 சிங்கப்பூர் டாலர் வரை இருக்குமா?
குறைந்த ஊதிய ஊழியர்களை மேம்படுத்தும் சிங்கப்பூரின் பயணத்தில் இந்த ஆண்டு ஒட்டுமொத்த மைல்கல்லாக பிசினஸ்களுக்கான progressive wage அடையாள அங்கீகாரத் திட்டம் ஜனவரி 2023ல் தொடங்கப்பட்டது. உணவுச் சேவைகள் PWM மற்றும் மார்ச் மாதத்தில் நிர்வாகிகள் மற்றும் ஓட்டுநர்களுக்கான ஊதியங்கள். ஜூலை மாதம் கழிவு மேலாண்மை PWM அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், குறைந்த ஊதியம் பெறும் ஊழியர்களுக்கான முத்தரப்பு பணிக்குழுவின் அனைத்து பரிந்துரைகளும் செயல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கொள்கையின் மூலம் சிங்கப்பூரர்கள் மேம்படுத்துவதன் மூலம் வெளிநாட்டு ஊழியர்களும் பயன்பெறுவார் என்று நம்பப்படுகிறது. இதனால் கோட்டா எண்ணிக்கையிலும் மாற்றம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.