சிங்கப்பூரை பொறுத்தவரை இங்கே எம்பிளாய்மெண்ட் பாஸ் மற்றும் S பாஸ் ஆகிய விதிகளின் கீழ் பலர் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் எப்படியாவது தங்களுடைய குடும்பத்தை சிங்கப்பூருக்கு சில காலம் அழைத்து வந்து அதன் அழகை காட்டி விட வேண்டும் என்ற முனைப்பில் இருப்பார்கள்.
அப்படி ஆர்வத்துடன் இருக்கும் பலருக்கும், கை கொடுக்கும் வண்ணம் தான் சிங்கப்பூர் அரசாங்கம் டிபெண்டண்ட் பாஸ் மற்றும் லாங் டெர்ம் விசிட் பாஸ் உள்ளிட்ட சிலவகை பாசுகளை செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில் இந்த பதிவில் லாங் டெர்ம் விசிட் பாஸ் என்றால் என்ன? அதற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? யாரெல்லாம் இந்த பாஸிற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்? அதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன? என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
Long Term Visit Pass
எம்பிளாய்மென்ட் மற்றும் S பாஸ் பெற்று, சிங்கப்பூரில் பணிபுரிபவர்கள் தங்கள் சொந்தங்களை சிங்கப்பூர் அழைத்து வர பயன்படுவது தான் இந்த LTVP.
யாரெல்லாம் இந்த பாஸில் சிங்கப்பூர் வரலாம்?
S பாஸ் மற்றும் எம்பிளாய்மென்ட் பாஸ் உள்ள நபர்களின் சட்டப்பூர்வ துணை, வளர்ப்பு மற்றும் ஊனமுற்ற பிள்ளைகளை அழைத்து வரலாம் (21 வயதுக்கு உட்பட்ட, திருமணமாகாத குழந்தைகள் மட்டும்). அதே நேரம் 12,000 சிங்கப்பூர் டாலருக்கு மேல் சம்பளம் பெறுபவர்கள், இந்த பாஸ் மூலம் தங்கள் பெற்றோரை கூட சிங்கப்பூருக்கு அழைத்து வர முடியும்.
என்னென்ன ஆவணங்கள் வேண்டும்?
தனது சட்டப்பூர்வ வாழ்கை துணையை அழைத்து வர, திருமண சான்றில் கட்டாயம் இணைக்கப்பட வேண்டும். ஊனமுற்ற குழந்தையை அழைத்து வர வேண்டும் என்றால், அவர்கள் சிகிச்சை பெறும் மருத்துவரிடம் சான்றிதழ் பெற்று வரவேண்டும். தத்தெடுத்த குழந்தையை அழைத்து வர, அரசு வழங்கும் சான்றிதழை இணைக்க வேண்டும். பெற்றோரை அழைத்து வர வேண்டும் என்றால், சிங்கப்பூரில் பாஸ் உள்ள நபரின் பிறப்பு சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும் (அதில் பெற்றோர் பெயர் இடம்பெற்றிருக்க வேண்டும்).
சிங்கப்பூரின் Dependant’s Pass – யாருக்கெல்லாம் கிடைக்கும்? வழிமுறைகள் என்ன?
எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
சிங்கப்பூரில் உரிய பாஸ் வைத்திருப்பவர்கள் மட்டுமே, தங்கள் சொந்தங்களை அழைத்துவர விண்ணப்பிக்க முடியும். சிங்கப்பூரில் உள்ள ஸ்பான்சர் மூலமும் விண்ணப்பிக்க முடியும். இதற்கான கட்டணம் ஒருவருக்கு 105 சிங்கப்பூர் டாலர் ஆகும்.