சிங்கப்பூர் டூர் வரும் அனைவருக்குமே இருக்கும் ஆசை என்னவோ லிட்டில் இந்தியா பகுதியை பார்ப்பதாக தான் இருக்கும். அப்படி இந்திய மனம் வீசும் இந்த பகுதிக்கு உங்களை அழைத்து செல்கிறோம். ஒரு விர்சுவல் டூர் அடிக்கலாம் வாங்க.
லிட்டில் இந்தியாவின் முதல் சாலை சிராங்கூன் சாலை. இங்கு ஒரு பக்கம் கடைகளும், எதிர்புறம் வீடுகளும் அமைந்து இருக்கும். பார்க்கும் போது இது வெளிநாட்டு தானா? இந்தியாவில் இருக்கிறோமா என்ற குழப்பத்தினை கூட சிலருக்கு கொடுக்கும்.
இதையும் படிங்க: செலவே இல்லாமல் சிங்கப்பூர் போக job சைட்ஸ் இருக்கு? ஆனா ATSல் தப்பிக்க முடியுமா? Resume இப்படி பக்காவா இருந்தா? லட்சங்களில் சம்பளம் உறுதி!
சிராங்கூன் சாலைகளில் இருக்கும் மொபைல் ஷாப் முதல் சாக்லேட் கடை வரை நீங்க வேறு எங்கும் வாங்க முடியாத விலையில் கொடுத்து வருகின்றனர். இந்தியா திரும்பும் போது இங்கு ஒரு பர்சேஸ் போட்டாலே பெட்டி நிரம்பிவிடும். இந்த கடைகளை தாண்டி சென்றால் வீரமாகாளி அம்மன் கோயில் இடம்பெற்று இருக்கும். கிராமத்து கோயில் அமைப்பில் இருப்பது தான் இந்த கோயிலின் ஸ்பெஷல்.
தேக்கா பகுதிகளை பொருத்தவரை அதிக அளவில் தமிழர்கள் இருப்பதால் இங்கு இருக்கும் எல்லா கடை பலகைகளுமே தமிழில் தான் இருக்கும். தமிழ்நாட்டில் பெயர் பெற்ற நிறுவனங்கள் லிட்டில் இந்தியாவில் கிளைகள் வைத்து இருக்கிறார்கள். இந்த பகுதிகளில் இருக்கும் பூக்கடைகளுக்கு பூ ஏற்றுமதி தமிழ்நாட்டின் திருச்சியில் இருந்து அனுப்படுவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சிங்கப்பூரில் வேலைக்கு வரும் தமிழர்களா நீங்க… அப்போ உங்களுக்கு இந்த Rules தெரியணும்… மிஸ் பண்ணாதீங்க அப்புறம் பர்சுக்கு செம வேட்டு தான்!
தமிழ்நாட்டின் பராம்பரிய ஸ்வீட்களுக்கும் கூட லிட்டில் இந்தியாவில் கடை இருப்பது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூரில் அதிகபட்சமாக 3 லட்சத்துக்குள் தமிழ் மக்கள் வாழ்வதாக கூறப்படுகிறது. அந்த எண்ணிக்கையில் அதிகபட்ச மக்கள் இருப்பது லிட்டில் இந்தியாவில் தான்.
24 மணி நேரமும் ஷாப்பிங் செய்யும்படி அமைந்து இருக்கும் முஸ்தபா சென்டரில் பொருள் செம கம்மி விலையில் கிடைக்கும். இருந்தும் லிட்டில் இந்தியா பகுதியில் இருக்கும் தமிழர்கள் சொந்த நாட்டில் இருப்பது போல ரூல்ஸை பாலோ செய்வது இல்லை என்ற குற்றச்சாட்டும் தொடர்ந்து இருந்து வருகிறது.