சிங்கப்பூரில் தற்பொழுது தொழிலாளர் சந்தையில் காணப்படும் மீட்சியின் விளைவாக வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. கொரோனா காலத்தில் நிலவிய கடுமையான வேலையின்மை காலகட்டத்திற்கு பிறகு மீண்டும் வேலை வாய்ப்புகள் தற்போது அதிகரித்துள்ளது.
வெளிநாடுகளிலிருந்து இல்ல பணிப்பெண்களாக இங்கு வந்தவர்களை கணக்கிலெடுக்காமல் பார்க்கும் பட்சத்தில், இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 12 ஆயிரத்து 200 பேருக்கு புதிதாக வேலை கிடைத்துள்ளது என்று மனிதவள அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.
மேலும் கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தற்போது வேலைவாய்ப்பு உருவாக்கமானது அதிகரித்துள்ளது. மேலும் வெளிநாட்டு ஊழியர்களின் சிங்கப்பூர் வருகைக்கு பல கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், உள்ளூர்வாசிகள் பலர் வேலைகளில் அமர்த்தப்பட்டு வருகின்றனர்.
தகவல் தொடர்பு, தொலைத்தொடர்பு, உணவு மற்றும் சுகாதாரம், சமூக சேவை மற்றும் நிர்வாகம் என்று பல துறைகளிலும். அந்த துறைகளைச் சார்ந்த துணை சேவை பணிகளிலும் உள்ளூர்வாசிகளுக்கு தற்போது புதிய வேலை நியமனங்கள் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் கடந்த ஆண்டில் கொரோனா பரவல் காரணமாக பலர் வேலையிழந்த நிலையில், ஆறு மாதங்களுக்குப் பிறகு தற்போது புதிய வேலைகள் கிடைத்துவருவது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு வேலையிழந்தவர்கள் விகிதத்தை கணக்கிடும்போது அதற்கு சமமான அளவில் புதிய வேலைவாய்ப்புகள் தற்போது உருவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை மனிதவள அமைச்சகமும் உறுதிப்படுத்தியுள்ளது.
இருப்பினும் கொரோனா தாக்கம் தொடங்கிய நிலைக்கு முந்தைய சூழலை தொழிலாளர் சந்தை இன்னும் எட்டவில்லை என்று மனிதவள அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.