TamilSaaga

இந்தியர்களே… சிங்கப்பூருக்கு கிளம்ப தயாராகுங்க… 11 ஆண்டுகளில் இல்லாத “உச்சபட்ச” வேலைவாய்ப்பு- வேலை தேடுவோருக்கு காது குளிர வந்திருக்கும் ManpowerGroup சர்வே

கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவில் இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் சிங்கப்பூரில் உள்ள முதலாளிகள் பலர் அதிக அளவிலான பணியாளர்களை வேலைக்கு அமர்த்த விருப்பம் தெரிவித்துள்ளனர். சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் ஆட்சேர்ப்பு நிறுவனமான ManpowerGroup, 500க்கும் மேற்பட்ட முதலாளிகளிடம் நடத்திய ஒரு ஆய்வின்படி, இந்த ஆண்டின் முதல் காலாண்டிற்கான NEO எனப்படும் Net Employment Outlook 25 சதவிகதமாக இருந்த நிலையில் எதிர்வரும் இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் அது மேலும் 11 புள்ளிகள் உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பார்வையாளர்கள் மீது கற்களை வீசிய குட்டி சிம்பன்சி : “பின்னால் இருந்து வந்து வெளுத்து வாங்கிய தாய்” – மனுஷங்க கத்துக்கணும்

கடந்த 2011ம் ஆண்டின் நான்காவது (இறுதி) காலாண்டில், புதிய ஊழியர்களைக் பணிக்கும் அமர்த்தும் முடிவில் இருந்து சிங்கப்பூரில் உள்ள பல நிறுவனங்கள் சற்று விலகியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அதற்கு பிறகு சுமார் 11 ஆண்டுகள் கழித்து தற்போது புதிய ஊழியர்களை பணியமர்த்தும் முதலாளிகளின் எண்ணமும் அதை சார்ந்த NEO சதவிகிதமும் மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. நிச்சயம் இதனால் சிங்கப்பூரில் உள்ள பல நிறுவனங்கள் மீண்டும் தங்களுக்கான புதிய ஊழியர்களை வேலைக்கு அமர்த்த தயாராகி வருகின்றனர் என்றே கூறலாம்.

ManpowerGroup நடத்திய கணக்கெடுப்பில் சேர்க்கப்பட்டுள்ள 11 துறைகளில், தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, தகவல் தொடர்பு மற்றும் ஊடகத் துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் சுமார் 38 சதவிகிதம் அதிக அளவிலான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க ஆர்வம் கட்டியுள்ளதாக ஆய்வு கூறுகிறது. அதேபோல உற்பத்தி, வங்கி, நிதி, காப்பீடு மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளில் 26 சதவிகித வேலைவாய்ப்பு உயர்வும் கட்டுமானத் துறையில் 24 சதவிகித உயர்வும் அதிகரிக்கவுள்ளன. அதே நேரத்தில் ஹோட்டல் துறையை பொறுத்தவரை இந்த புள்ளிவிவரம் சற்று மந்தநிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

NeXT கேரியர் கன்சல்டிங் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் திரு பால் ஹெங் இதுகுறித்து பேசும்போது, புதிய பணியாளர்களை பணியமர்த்துவது சிறந்தது என்று கருதும் நிறுவனங்கள் அனைத்தும் தற்போது அவர்களுடைய விருப்பங்களை வெளியிட்டு வருகின்றனர் என்று கூறினார். பெருந்தொற்றால் முடங்கிய நிலைமை இதனால் சீரடையும் என்றும் அவர்கள் நம்புகின்றனர் என்றார் அவர்.

சிங்கப்பூரில் 99,000 முதலாளிகளுக்கு “840 மில்லியன் டாலர்கள்” உதவித் தொகை – இனியாவது வெளிநாட்டு ஊழியர்களுக்கு அந்தந்த Pass-க்கு ஏற்ற உண்மையான சம்பளம் கிடைக்குமா?

எது அப்படி இருந்தாலும் சுமார் 11 ஆண்டுகள் கழித்து புதிய பணியாளர்களை பணியமர்த்தும் சிங்கப்பூர் நிறுவனங்களின் இந்த முடிவு இந்தியா உள்பட பல வெளிநாடுகளை சேர்ந்த தொழிலாளர்களுக்கு நிச்சயம் இனிப்பான செய்தியாகவே இருக்கும். எல்லைகளை மீண்டும் திறந்து வரும் சிங்கப்பூர் தற்போது மீண்டும் புதிய பணியாளர்களை பணியமர்த்தவும் ஆர்வம் காட்டி வருகின்றது. ஆகவே சிங்கப்பூரில் பணிசெய்ய ஆர்வமாக உள்ளவர்கள் உரிய துறைகளில் தங்கள் திறமைகளை வளர்த்துக்கொண்டு காத்திருந்தாள் நிச்சயம் விரைவில் சிங்கப்பூரில் வேலைகிடைக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts