TamilSaaga

திடீரென பற்றிக்கொண்ட க்ளீனிங் ரோபோட்! சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் பதற்றம்!

சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் கடந்த 8-ம் தேதி மாலை 7 மணியளவில் சார்ஜ் போடப்பட்டிருந்த ரோபோட் திடீரென தீப்பற்றி எறிந்துள்ளது. 

அதில் இருந்து வெளிப்பட்ட புகையால் அங்கிருந்த பாதுகாப்பு அமைப்புகள் செயல்பட்டு தீயை அணைத்து விட்டது. அத்துடன் அவசர உதவி சேவைக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்களும் விரைந்து மருத்துவமனைக்கு வருகை தந்தனர். 

ஆறாவது மாடியில் இருந்த 76-வது வார்டில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. நிலைமை எதுவும் மோசமாகவில்லை என்றாலும் தீப்பற்றிய  வார்டில் இருந்த அனைத்து நோயாளிகளும் வெளியேற்றப்பட்டு வேறு வார்டிற்கு மாற்றப்பட்டனர்.

மேலும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் தனது முகநூல் பக்கத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

“இன்று மாலை 7 மணியளவில், வார்டு 76-ல் ஃபயர் அலாரம் இயக்கப்பட்டுள்ளது. முதல் கட்ட விசாரணையில் தீக்கான காரணம் சார்ஜிங்-ல் கனெக்ட் செய்யப்பட்டிருந்த கிளீனிங் ரோபோட் தீப்பற்றியது தான் என்று தெரியவந்துள்ளது. அந்த நேரத்தில் உடனடியாக Sprinklers இயங்கியது, மற்றும் மருத்துவமனை பாதுகாப்பு குழுவும் உடனடியாக செயல்பட்டனர். மருத்துவமனைக் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்றபோது, தீ ஏற்கனவே அணைக்கப்பட்டிருந்தது.

எச்சரிக்கையாக, வார்டு 76-ல் இருந்த நோயாளிகள் தற்காலிகமாக மற்ற வார்டுகளில் மாற்றப்பட்டனர். எவருக்கும் காயமோ அல்லது பாதிப்போ ஏற்படவில்லை. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்து விட்டோம். மேலும் மாலை 9 மணிக்குள் பெரும்பாலான நோயாளிகள் தங்கள் வார்டுகளுக்கே திரும்பி வந்துள்ளனர். நோயாளிகளுக்கான மருத்துவ சேவையில் எந்த இடையூறுகளும் ஏற்படவில்லை. இது போன்ற சிரமங்களை சமாளிக்க சரியான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நோயாளிகளுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிக்கவும்.” என அந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்த பதிவு சிங்கப்பூர் பொது மருத்துவமனையின் தற்காலிக செயலாளரான ஜோசப் சுவா வெளியிட்டுள்ளார்.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்!

 

Related posts