TamilSaaga

அந்தரத்தில் பறந்து தலைக்குப்புற விழுந்த கார்.. ஓடி வந்து உதவிய மலேசியர்கள்.. எமலோகத்தின் Entrance வரை சென்று உயிர் பிழைத்த ஒரு “சிங்கப்பூர்” குடும்பம்

சிங்கப்பூரைச் சேர்ந்த Soh என்பவரது ஒட்டுமொத்த குடும்பமே ஒரு மோசமான விபத்தில் இருந்து உயிர் பிழைத்திருக்கிறது. கிட்டத்தட்ட அனைவரும் மரணத்தின் எல்லை வரை சென்று வந்திருக்கிறார்கள் எனலாம்.

Soh (வயது 60) சிங்கப்பூரில் கட்டுமானத் தொழில் செய்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் சில தினங்கள் விடுமுறையை கழிக்க, கடந்த ஞாயிறு (மே.1) அதிகாலை 5 மணியளவில் தனது காரில் மலேசியா புறப்பட்டார். மனைவி, மூத்த சகோதரி, அவரது கணவர் மற்றும் தங்கை என்று மொத்தம் 5 பேருடன் கிளம்பினார்.

Chamek-ல் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சீனப் புதிய கிராமத்தைச் சுற்றிப்பார்த்தபின் அவர்கள் க்ளுவாங்கிற்கு (Kluang) சென்று கொண்டிருந்தனர். இந்த இரண்டு இடங்களும் மலேசியாவின் ஜோகூரில் உள்ளன.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணியளவில் மலேசியாவின் ஜோகூரில் உள்ள ஜாலான் நியோர்-க்ளுவாங் சாலையில் அவர்கள் வேகமாக பயணித்துக் கொண்டிருந்தனர்.

மேலும் படிக்க – சிங்கப்பூரில் மீண்டும் “நேரடி லாட்டரி குலுக்கல்..” இரண்டு ஆண்டிற்கு பிறகு இன்று துவக்கம்.. பார்வையாளர்கள் பங்கேற்க அனுமதி – Singapore Pools அறிவிப்பு

அப்போது திடீரென எதிரே இருந்து வந்த ஒரு பைக்கின் மீது மோதுவதை தவிர்க்க Soh காரை வேகமாக திருப்பினார். இதில், நிலைதடுமாறி கார், சாலையிலிருந்து விலகி பனை தோட்டத்தில் பாய்ந்து தலைக்குப்புற கவிழ்ந்தது.

விழுந்த அதிர்வில், காரின் கதவுகள் அனைத்தும் லாக் ஆகிக் கொள்ள, அவர்கள் யாராலும் வெளியே வர முடியவில்லை. பின்பு காரில் சிக்கியிருந்த 5 பேரும் தப்பிக்க கண்ணாடிகளை அடித்து உடைத்து வெளியே வந்தனர்.

இந்த விபத்து குறித்து பேட்டியளித்த Kluang மாவட்ட காவல்துறைத் தலைவர் லோ ஹாங் செங், “எதிர் திசையில் இருந்து வரும் பைக் மீது மோதுவதை தவிர்க்க காரின் ஓட்டுநர் முயன்றார். எனினும், அந்த சாலை வழுக்கும் நிலையில் இருந்த காரணமாக, அவர்கள் சென்ற கார் சறுக்கி சாலையின் இடதுபுறத்தில் உள்ள புதர்களில் விழுந்தது” என்றார்.

இந்த விபத்து குறித்து பேசிய Soh, “கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த சம்பவம் நடந்தது. கார் தலைகீழாக கவிழ்ந்தது, நான்கு சக்கரங்களும் வானத்தை நோக்கி இருந்தன. அந்த நேரத்தில், எங்கள் அனைவரின் கதையும் முடிந்தது என்று நினைத்தேன். அதிர்ஷ்டவசமாக நாங்கள் அனைவரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினோம். பெரியளவில் என் குடும்பத்தினருக்கு காயம் ஏற்பட்டிருந்தால்.. என்ன செய்திருப்பேன்!? என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை.

மலேசியாவின் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகளும், அப்பகுதியில் இருந்த வழிப்போக்கர்களும் தான் நாங்கள் கூச்சலிடும் சப்தத்தை கேட்டு, கண்ணாடிகளை உடைத்து எங்களை மீட்டனர். அவர்களுக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts