TamilSaaga

ISIS-சை தோற்கடிக்க சிங்கப்பூரின் ஆதரவு உண்டு – G20 மாநாட்டில் பாலகிருஷ்ணன் பேச்சு

இத்தாலி நாட்டில் கடந்த ஜூன் 27ம் தேதி நடந்த G20 மாநாட்டில் கலந்துகொள்ள சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் இத்தாலி சென்றார். இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமாக ISIS இயக்கங்களின் செயல்பாடுகளை ஒடுக்கவது தொடர்பான கலந்துரையாடலில் பல நாடுகளின் அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

ஈராக் சிரியா போன்ற நாடுகளில் இருந்து வரும் எஞ்சிய ISIS இயக்கங்கள் அவற்றின் அச்சுறுத்தல்களை நீக்குவது குறித்து இந்த கலந்துரையாடலில் விவாதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஜி 20 மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் ஐ.எஸ்.ஐ.எஸ்-ஸின் தோல்வியை உறுதி செய்வதற்கான முயற்சிகளுக்கு சிங்கப்பூரின் ஆதரவு எப்போதும் உண்டு என்று தெரிவித்தார்.

நெருக்கமான சமூக ஈடுபாடு மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு தயார்நிலை ஆகியவற்றின் மூலம் பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கான சிங்கப்பூரின் முயற்சிகளை பற்றி அவர் அந்த மாநாட்டில் பேசினார். மேலும் சிங்கப்பூர் புதிய, பயங்கரவாத எதிர்ப்பு தகவல்தொழில்நுட்ப வசதி மற்றும் உளவுத்துறை பகிர்வை எவ்வாறு மேம்படுத்துகிறது என்பதையும் தான் எடுத்துரைத்ததாக அவர் கூறினார்.

மேலும் பல நாட்டு தலைவர்களை சந்தித்தது மிகவும் பெருமையாக உள்ளது என்றும் விவியன் பாலகிருஷ்ணன் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

Related posts