TamilSaaga

“இரண்டாம் காலாண்டில் சிங்கப்பூர் பொருளாதாரம் 14.7% வளர்ச்சி” – எல்லைகள் விரைவில் திறக்க வாய்ப்பு

சிங்கப்பூரில் இந்த 2021ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் சிங்கப்பூரின் பொருளாதாரமானது 14.7 சதவிகிதம் வளர்ச்சியடைந்துள்ளது. இது முந்தைய காலாண்டில் கண்ட 1.5 சதவிகித வளர்ச்சியை விட வேகமாக இருந்தது என்று வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் (எம்டிஐ) இன்று புதன்கிழமை (ஆகஸ்ட் 11) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் 2021க்கான ஜிடிபி வளர்ச்சி கணிப்பை 4 முதல் 6 சதவிகிதமாக அமைச்சகம் உயர்த்தியுள்ளது. இது இந்த ஆண்டின் முதல் பாதியில் சிங்கப்பூர் பொருளாதாரத்தின் “எதிர்பார்த்ததை விட சிறந்த” மற்றும் சமீபத்திய வெளி மற்றும் உள்நாட்டு பொருளாதார முன்னேற்றங்களை அடிப்படையாகக் கொண்டது என்று MDI தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் பெருந்தொற்று நிலைமை சீர்செய்யப்பட்டு, நாடு முழுவதும் தடுப்பூசி திட்டம் சரியான பாதையில் செல்வதால் “சிங்கப்பூரின் பொருளாதாரம் ஆண்டின் இரண்டாம் பாதியில் படிப்படியாக மீட்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பெரும்பாலும் வெளிப்புற நோக்குடைய துறைகளால் ஆதரிக்கப்படும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் வெளிநாட்டு ஊழியர்களை சார்ந்துள்ள துறைகளில் ஊழியர் பற்றாக்குறை வெகுவாக குறையும் என்றும் நம்பப்படுகிறது. மேலும் பல நாடுகளுக்கான எல்லைக்கட்டுப்பாடுகளும் படிப்படியாக தளர்த்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Related posts