TamilSaaga

சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம்.. Terminal 1 மற்றும் 3ல் அலைமோதிய மக்கள் கூட்டம் : கடைகளில் ஜோராக நடந்த விற்பனை – பிறந்தது நம்பிக்கை!

இன்று ஏப்ரல் 1ம் தேதி முதல், சிங்கப்பூர் தனது எல்லை கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்திய நிலையில், சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் செக்-இன் கவுன்டர்களில் கடந்த 2020ம் ஆண்டுக்கு பிறகு இன்று மக்கள் வெள்ளம் நிறைந்திருந்தது. முன்பு பெரும்பாலும் காலியாக இருந்த டெர்மினல்களில் தற்போது மக்கள் கூட்டம் ட்ராலிகளுடன் அங்கும் இங்கும் சென்ற காட்சி கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது என்றே கூறலாம். காலியாக காணப்படும் விமான பட்டியல் பலகை இன்று படு பிஸியாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

“சிங்கப்பூரில் பூட்டு கம்பெனிக்கே லாக் வைத்த பலே ஊழியர் : பொதுமக்களின் உதவியை நாடும் நிறுவனம் – தகவல் அளிப்பவர்களுக்கு 5000 வெள்ளி சன்மானம்

நடைபாதைகளிலும், ஓட்டல்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது மீண்டும் “இயல்பு நிலை” திரும்புகிறது என்பதை உறக்கச்சொல்லியது. சாங்கியின் டெர்மினல்கள் 1 மற்றும் 3 மீண்டும் தனது இயல்புநிலைக்கு திரும்பியது. சிங்கப்பூரில் விமான நிலைய ஊழியர்களிடையே உருவான பெருந்தொற்று க்ளஸ்டர் காரணமாக மேற்குறிப்பிட்ட இரண்டு டெர்மினல்களும் முற்றிலுமாக முன்பு மூடப்பட்டது நினைவுகூரத்தக்கது.

44 வயதான திரு ஃபிராங்க்ளின் டாங், இன்று வெள்ளிக்கிழமை காலை 7.45 மணிக்கு மாலத்தீவுக்குச் செல்லும் விமானத்திற்காக விமான நிலையத்தை அடைந்தபோதும், சுமார் ஒரு மணி நேரம் வரிசையில் நிற்கவேண்டியிருந்ததாக அவர் ஊடகங்களிடம் கூறினார். “எனது கையில் ஒரு உண்மையான விமான டிக்கெட்டை வைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது”. காலையில் வெவ்வேறு இடங்களுக்கு சில விமானங்கள் பறக்க தயாராக இருந்தன, ஆனால் செக்-இன் செய்ய ஒரு வரிசை மட்டுமே திறந்திருந்தது சற்று தாமதத்தை ஏற்படுத்தியது. சில தானியங்கி செக்-இன் இயந்திரங்களையும் பயன்படுத்த முடியவில்லை” என்று அவர் கூறினார்.

சாங்கி விமான நிலையக் குழுவின் தரவுகளின்படி, கடந்த பிப்ரவரியில் 7,03,000 பேர் சாங்கி விமான நிலையத்தைப் பயன்படுத்தியுள்ளனர். இது ஒரு வருடத்திற்கு முன்பு இதே காலகட்டத்தில் 1,18,000 ஆக இருந்தது என்பதும் நினைவுகூரத்தக்கது. டெர்மினல் 2 கட்டம் கட்டமாக மீண்டும் திறக்கப்பட உள்ள நிலையில், வரும் மாதங்களில் அதிக அளவிலான பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக போக்குவரத்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு தொற்றுநோய்க்கு முந்தைய நிலைகளில் இருந்த அளவில் சுமார் 50 சதவிகித பயணிகளை எதிர்பார்ப்பதாக விமான நிலைய அதிகாரிகள் கூறுகின்றனர். 40 வயதான மலேசியாவைச் சேர்ந்த ஜமுனா கிருஷ்ணன்என்பவர் சிங்கப்பூரில் உள்ள ஒரு வேஃபர் கம்பெனியின் Production Operator பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். சிங்கப்பூரில் உள்ள நிறுவனத்திற்காக கோலாலம்பூரில் கடந்த இரண்டு வருடங்களாக வீட்டில் இருந்து வேலை செய்து வந்த நிலையில் முதல் முறையாக சிங்கப்பூரில் இன்று அவர் கால்பதித்துள்ளார்.

இதுபோன்ற பல பசுமையான நினைவுகளை இன்று சாங்கி விமான நிலையம் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பின் கண்டுள்ளது. டெர்மினல் 3ல் உள்ள காபி கிளப்பின் செய்தித் தொடர்பாளர் பேசும்போது, சமீபத்திய வாரங்களில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது என்றும், தொற்றுநோய்களின் போது பல ஊழியர்கள் தாயகமான மலேசியாவிற்கு திரும்பிய பின்னர், அவரது கடையில் இப்போது பணியாளர்கள் குறைவாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

சிங்கப்பூர் மலேசிய எல்லை.. “சரியாக 12 மணிக்கு குட்டி சைக்கிளில் Borderஐ கடந்த முதல் நபர்” – கைதட்டி வவேற்ற அதிகாரிகள்

இன்னும் வெகு சில மாதங்களில் சாங்கி தனது இயல்பு நிலைக்கு அருகில் சென்றுவிடும் என்று எதிர்பார்க்கலாம். மக்களும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளோடு பயணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts