சிங்கப்பூருக்கு இந்தியாவில் இருந்து வருபவர்களுக்கு டிசம்பர் மாதத்தில் இமிகிரேஷனில் கேட்கப்படும் டாக்குமெண்ட்கள் குறித்த முக்கிய தகவல்கள். இதில் ஒன்று குறைந்தால் கூட நீங்கள் மீண்டும் இந்தியாவிற்கே செல்ல வேண்டியது தான்.
S-Pass, E-Pass, Tourist visa, dependent pass, business visa, student visa, TWP, TEP ஆகிய எல்லா வகையான பாஸ்களுக்கும் ஒரே மாதிரியான டாக்குமெண்ட்கள் தான் கேட்கப்படும்.
முதலில் விசாவை வைத்துக்கொள்ளுங்கள். கோவிட் தடுப்பூசி இரண்டும் போட்டதற்கான சான்றிதழ். இதில் நீங்க தடுப்பூசி போட்டு 1.5 வருடத்தினை கடந்து விட்டால் பூஸ்டர் போட்டிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதையும் சான்றிதழிலில் குறிப்பிட்டு வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த சான்றிதழும் சர்வதேச சான்றிதழாக தான் இருக்க வேண்டும். உங்க பெயருடன் தந்தை பெயர் இணைந்து இருக்க வேண்டும். பிறந்த தேதி மற்றும் பாஸ்போர்ட் எண் கட்டாயமாக அந்த சான்றிதழில் குறிப்பிட்டு இருக்க வேண்டும்.
டிக்கெட் மற்றும் SG arrival card. arrival card கட்டாயம் இல்லை என்றாலும் உடன் வைத்திருப்பது நல்லது. tourist visaவில் வந்திருப்பவர்கள் வரும்போது ரிட்டர்ன் டிக்கெட்டையும் போட்டு இருக்க வேண்டும். இந்த விசாவில் வருபவர்கள் கல்வி சான்றிதழ்களை எடுத்து வராதீர்கள்.
Work Permit, PCM permit, shipyard இந்த மூன்று பேருக்கும் ஒரு வகையான டாக்குமெண்ட்கள் எடுத்து வர வேண்டும். விசா, சர்வதேச கோவிட் தடுப்பூசி போட்ட சான்றிதழ், on boarding ஸ்லாட் புக்கிங் செய்த தகவல், டிக்கெட், பாண்ட் பேப்பர், SG arrival card. இதில் ஒரு டாக்குமெண்ட்கள் இல்லாத பட்சத்தில் உங்களை அப்படியே திருப்பி அனுப்பி விடுவார்கள்.
குவாரண்டைன் இருப்பதால் உங்களுக்கு on boardingல் மூன்று நாட்கள் தங்க வைத்திருப்பார்கள். இது புதியவர்களுக்கு மட்டுமே. ஸ்லாட் போடப்படும் நாளை வைத்து டிக்கெட்டை போடுங்கள். இந்த டாக்குமெண்ட்டுகள் கண்டிப்பாக பிரிண்ட்டில் வைத்திருங்கள். போனில் காட்டுவது போதுமானதாக இருக்காது.