TamilSaaga

சிங்கப்பூரில் டெண்டர் சதி: 2 கட்டுமான நிறுவனங்களுக்கு கோடிக் கணக்கில் அபராதம்!

சிங்கப்பூரில் உள்ள சமூக நிலையங்களை மேம்படுத்துவதற்கான tender-களில் முறைகேடு செய்ததாக, இரண்டு கட்டுமான நிறுவனங்களுக்கு மொத்தமாக 4.6 மில்லியன் சிங்கப்பூர் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 25.6 கோடி ரூபாய்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதத்தை, சிங்கப்பூரின் போட்டி மற்றும் நுகர்வோர் ஆணையம் (CCCS) விதித்துள்ளது.

குற்றச்சாட்டுக்கு உள்ளான நிறுவனங்கள்:

 

 

மே 23 அன்று CCCS வெளியிட்ட அறிவிப்பில், Trust-Build Engineering and Construction மற்றும் Hunan Fengtian Construction Group Co ஆகிய இரண்டு நிறுவனங்களும் 2022-ஆம் ஆண்டில் முறைகேட்டில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேடு, புகிட் படோக், செங் சான் மற்றும் யூனோஸ் ஆகிய சமூக நிலையங்களுக்கான மேம்பாட்டுப் பணிக்கான மூன்று Tender-கள் நடந்தது.

இந்த மூன்று Tender-களின் மொத்த மதிப்பு சுமார் 56 மில்லியன் சிங்கப்பூர் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 311 கோடி ரூபாய்) ஆகும். இந்த ஒப்பந்தங்களில் பழுதுபார்ப்பு, அடித்தளம் அமைத்தல், சாரக் கட்டு போடுதல் போன்ற முக்கியப் பணிகள் அடங்கும்.

CCCS-இன் விசாரணை ஜூலை 2023-இல் தொடங்கியது. விசாரணையில், இரண்டு நிறுவனங்களும் தங்கள் ஒப்பந்த விலைகள் மற்றும் விண்ணப்பங்களில் சதி செய்துள்ளன என்பது தெரியவந்தது. அதாவது, Trust-Build நிறுவனம் திட்டத்தை வெல்வதற்கான வாய்ப்பை அதிகரிக்க, மற்ற நிறுவனமான Hunan Fengtian-இன் ஒப்பந்த விலையை விட Trust-Build-இன் விலையைக் குறைவாகக் காட்ட சதி செய்துள்ளனர். Hunan Fengtian நிறுவனமே Trust-Build-இன் ஒப்பந்த விண்ணப்பங்களைத் தயாரித்து, அதன் விலைகளை நிர்ணயித்துள்ளது.

ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்படுவதற்கு முன்பே, People’s Association (PA) அமைப்பினர், இரு நிறுவனங்களின் ஒப்பந்தச் சமர்ப்பிப்புகளிலும் ஒரே மாதிரியான வார்த்தைகள், வரைபடங்கள் மற்றும் புகைப்படங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் கவனித்தனர். இந்த சந்தேகத்தின் அடிப்படையில், PA உடனடியாக CCCS-க்கு தகவல் அளித்தது.

“இந்த ஒப்பந்த முறைகேடுகளால் டெண்டர்கள் எந்தவொரு நிறுவனத்திற்கும் வழங்கப்படவில்லை. இத்தகைய மோசடி நிறுவங்கள் மீது தவறான எண்ணத்தை ஏற்படுத்துவதாக CCCS எச்சரித்தது. இந்த மோசடியில் ஈடுபட்ட Hunan Fengtian நிறுவனம், 50 மில்லியன் டாலர் வரையிலான பெரிய கட்டுமான ஒப்பந்தங்களையும், Trust-Build நிறுவனம் 105 மில்லியன் டாலர் வரையிலான மிகப்பெரிய ஒப்பந்தங்களையும் மேற்கொள்ளும் அளவுக்கு, கட்டுமானத் துறையில் மிகவும் திறமையான மற்றும் பெரிய நிறுவனங்களாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

S$4.6 மில்லியன் அபராதம் என்பது இந்த நிறுவனங்களுக்கு நிதி சுமையாக இருக்கலாம். ஹுனான் ஃபெங்டியன் S$50 மில்லியன் வரையிலும், ட்ரஸ்ட்-பில்ட் S$105 மில்லியன் வரையிலும் மதிப்புள்ள ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் தகுதி பெற்றவை என்பதால், இந்த அபராதம் அவற்றின் நிதி நிலையை தற்காலிகமாக பாதிக்கலாம். இதனால், நிறுவனங்கள் செலவுகளைக் குறைக்க முயலலாம், இது ஊழியர்களின் வேலைவாய்ப்பு பாதுகாப்பை பாதிக்க வாய்ப்புள்ளது.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

வெளிநாட்டு ஊழியர்கள்: சிங்கப்பூரின் கட்டுமானத் துறையில் பெரும்பாலான ஊழியர்கள் வெளிநாட்டு தொழிலாளர்கள். இந்த அபராதம் நிறுவனங்களின் Work Permit அல்லது Employment Pass வழங்குவதற்கு கட்டுப்பாடுகளை ஏற்படுத்தினால், வெளிநாட்டு ஊழியர்களின் வேலைவாய்ப்பு புதுப்பித்தல் அல்லது புதிய ஆட்சேர்ப்பு பாதிக்கப்படலாம். உதாரணமாக, 2016இல், வெளிநாட்டு தொழிலாளர்களை தவறான முகவரியில் தங்க வைத்ததற்காக இரு நிறுவனங்களுக்கு S$180,000 அபராதம் விதிக்கப்பட்டபோது, அவை வெளிநாட்டு தொழிலாளர்களை பணியமர்த்துவதற்கு தடை விதிக்கப்பட்டது.

தொழிலாளர் சட்டங்கள்: சிங்கப்பூரில் தொழிலாளர்களை பாதுகாக்க கடுமையான சட்டங்கள் உள்ளன. Employment Act மற்றும் Workplace Safety and Health Act (WSH Act) ஆகியவை ஊழியர்களின் உரிமைகளை உறுதி செய்கின்றன. எடுத்துக்காட்டாக, முதலாளிகள் ஊழியர்களுக்கு அபராதம் விதிக்கவோ, அவர்களின் ஊதியத்திலிருந்து தன்னிச்சையாக பிடித்தம் செய்யவோ முடியாது, இது MOM (Ministry of Manpower) விதிகளால் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த அபராதத்தை நேரடியாக ஊழியர்களின் ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்ய முடியாது.

இந்த அபராதம், ஒப்பந்தச் சதிகளில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு ஒரு கடுமையான எச்சரிக்கையாக இருக்கும்.

சிங்கப்பூரில் முன்னணி MNC நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள் – விண்ணப்பிக்கும் வழிகள் மற்றும் முழுமையான தகவல்!

Related posts