TamilSaaga

“சிங்கப்பூர் நிறுவனத்தின் Game மீதான இந்தியாவின் தடை” : எங்கள் தரப்பில் என்ன தவறு உள்ளது? – இந்தியாவுக்கு சிங்கப்பூர் கடிதம்

சிங்கப்பூரின் தொழில்நுட்பக் குழுவான Sea-க்குச் சொந்தமான பிரபலமான கேமிங் செயலியான “Free Fire” மீதான இந்தியாவின் தடை குறித்து சிங்கப்பூர் கவலைகளை எழுப்பியுள்ளது. இந்தியாவின் இந்த தடைக்குப் பிறகு, நியூயார்க்கில் பட்டியலிடப்பட்ட தென்கிழக்கு ஆசிய நிறுவனத்தின் சந்தை மதிப்பு ஒரே நாளில் 16 பில்லியன் அமெரிக்க டாலர்கள் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் முதலீட்டாளர்கள் Sea-யின் இ-காமர்ஸ் செயலியான Shopee க்கும் தடையை இந்தியா நீட்டிக்கக்கூடும் என்று கவலைப்படுகிறார்கள், Shopee அண்மையில் தான் இந்திய நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.

“சிங்கப்பூரில் பெருந்தொற்று அதிகரிப்பு” : திட்டமிடப்பட்ட தளர்வுகள் ஒத்திவைக்கப்படுகிறது – MOH விளக்கம்

Sea அதன் தலைமையகத்தை இந்தியாவின் செல்வ செழிப்புள்ள நகரத்தில் வைத்திருந்தபோதும், ஏன் சீன செயலிகளை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கையில் “Free Fire” செயலியும் ஏன் குறிவைக்கப்பட்டது என்று சிங்கப்பூர், இந்திய அதிகாரிகளிடம் கேட்டுள்ள்ளது. இந்த செயலி “தற்செயலாக தடைசெய்யப்பட்டதா” என்று சிங்கப்பூர் வினவியதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் எழுப்பப்பட்ட கவலைகள், தடைக்கு உத்தரவிட்ட தகவல் தொழில்நுட்பத் துறைக்கு (IT) அனுப்பப்பட்டதாக இரண்டு இந்திய Sourceகள் தெரிவித்தன.

மேலும் இந்த விவகாரத்தில் சிங்கப்பூரின் கவலைகளுக்கு இந்திய அரசாங்கம் எவ்வாறு பதிலளிக்க திட்டமிட்டுள்ளது என்று தங்களுக்குத் தெரியாது என்று அண்ட் Sourceகள் கூறியதாக தெரியவந்துள்ளது. சிங்கப்பூர் அரசாங்கம் மற்றும் Sea-யின் செய்தித் தொடர்பாளர்கள் இந்த கருத்துக்கான மின்னஞ்சல் கோரிக்கைகளுக்கு உடனடியாக பதிலளிக்கவில்லை என்றும். அதே போல இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறை, அதன் வெளியுறவு அமைச்சகம் மற்றும் முக்கிய அரசாங்க செய்தித் தொடர்பாளர் அலுவலகமும் பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

சீனாவில் உள்ள சேவை மையங்களுக்கு பயனர்களின் தரவை அனுப்புவதாக நம்பப்படும் 54 செயலிகளின் குழுவில் “Free Fire” ஐ இந்தியா இந்த மாதம் சேர்த்துள்ளது என்று அரசாங்க வட்டாரங்கள் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தன. இதற்குப் பதிலளித்த சீனா, அனைத்து வெளிநாட்டு முதலீட்டாளர்களையும் பாரபட்சமற்ற முறையில் இந்தியா நடத்தும் என்று நம்புவதாகக் கூறியது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தியாவின் இந்த தடைக்கு அளித்த பதிலில், Sea கூறியதாவது “நாங்கள் எங்கள் இந்திய பயனர்களின் எந்த தரவையும் மாற்றவோ அல்லது சேமித்து வைக்கவோ மாட்டோம், அதை சீனாவிற்கும் அளிப்பதில்லை”. மேலும் எங்கள் நிறுவனம் இந்திய சட்டத்திற்கு இணங்க செயல்படும் ஒரு சிங்கப்பூர் நிறுவனம் என்றும் கூறினார்கள்.

“எதிர்வரும் 20 ஆண்டுகள்” : உள்ளூரில் வளர்க்கப்படும் மீன்களை நாம் ருசிக்க முடியுமா? – சிங்கப்பூர் உணவு பாதுகாப்பு எந்த நிலையில் உள்ளது?

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து விளக்கம் கேட்டு இந்திய தொழில்நுட்ப அமைச்சகத்துக்கும் கடிதம் அனுப்பியுள்ளது Sea. கடந்த 2009ம் ஆண்டு சிங்கப்பூரில் Sea நிறுவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts