TamilSaaga

டிசம்பர் மாதத்தில் சிங்கப்பூர் போறீங்களா? இதெல்லாம் தெரிந்து கொள்ள மிஸ் பண்ணிடாதீங்க!

இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு சுற்றுலா செல்ல விரும்புபவர்கள் பெரும்பாலும் டிசம்பர் மாதத்தை தேர்வு செய்வார்கள். சிங்கப்பூரிலும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருவது டிசம்பர் மாதத்தில் தான். இதற்கு காரணம் கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு, சீன புத்தாண்டு என வரிசையாக விழாக்களும், கொண்டாட்டங்களும் களைகட்டும் மாதம் இந்த டிசம்பர் மாதம் தான். ஆனால் அப்படி சிங்கப்பூர் செல்ல நினைப்பவர்கள் முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் சில உள்ளன.

சிங்கப்பூர் சீசன் :

  • சிங்கப்பூரில் டிசம்பர் மாதத்தில் தான் மழை அதிகமாக இருக்கும். காற்றின் ஈரப்பதம் 86 சதவீதம் வரை இருக்கும். டிசம்பர் மாதத்தின் 19 நாட்களில் மட்டும் சராசரியாக 287.4 மில்லி மீட்டர் வரை மழை பெய்யும்.
  • தட்பவெப்பநிலை 23.5 டிகிரி செல்சியஸ் முதல் 30 டிகிரி செல்சியஸ் தான் இருக்கும். குறைந்த நேரம் தான் சூரிய ஒளியையே பார்க்க முடியும்.
  • டிசம்பரில் சிங்கப்பூர் செல்ல திட்டமிடுபவர்கள் பாக்கெட் லைட், மழை மற்றும் குளிரை தாக்கும் வகையான் உடைகள், குடை போன்றவற்றை மறக்காமல் எடுத்துச் செல்ல வேண்டும்.

செலவு :

  • சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் மாதம் என்பதால் டிசம்பர் மாதத்தில் சிங்கப்பூரில் விலைவாசி கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். அதனால் பணத்தை மிச்சப்படுத்தி, பட்ஜெட்டிற்குள் அடங்கும் வகையில் சிங்கப்பூர் டிரிப்பை முடிக்க வேண்டும் என நினைப்பவர்கள் சிங்கப்பூர் செல்ல சலுவை விலையில் பேக்கேஜ் அறிவிக்கும் நிறுவனங்கள் மூலமாக டிக்கெட் புக் செய்து சென்று வரலாம்.
  • சிங்கப்பூரில் மீண்டும் பயன்படுத்தும் வகையிலான குடிநீர் பாட்டில்களை கையில் வைத்துக் கொண்டால் ஒவ்வொரு முறையும் தண்ணீர் பாட்டில் வாங்க பணத்தை செலவு செய்வதற்கு பதிலாக குழாய் தண்ணீர்களை பிடித்து குடிக்க பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • சிங்கப்பூருக்குள் பயணிக்க MRT, LRT ரயில் டிக்கெட்கள் வாங்கி வைத்துக் கொண்டால் சலுகை விலையில் அளவில்லாமல் பயணிக்கலாம். 3 நாட்கள் வரை தங்குபவர்கள் சாதாரண பஸ் சேவைகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

விசா பெற தேவைப்படும் டாக்குமென்ட்கள் :

  • சிங்கப்பூரில் இந்திய குடிமக்களுக்கு visa-on-arrival முறை கிடையாது.
  • டூரிஸ்ட் விசா மூலம் சிங்கப்பூர் செல்லும் இந்தியர்கள் 30 நாட்கள் அங்கு தங்க முடியும். ஆனால் விசா 2 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும்.
  • சிங்கப்பூர் செல்வதற்கு டூரிஸ்ட் விசா, பிசினஸ் விசா என இரண்டு வகையான விசாக்களை சிங்கப்பூர் அரசு வழங்குகிறது. அதனால் நீங்கள் எதற்காக செல்கிறீர்களோ அதற்கான காரணத்தை முறையாக சொல்லி, உரிய அனுமதியை சிங்கப்பூர் நிர்வாகத்திடம் இருந்து பெற வேண்டும்.
  • விசா விண்ணப்பத்துடன் உங்களை பற்றிய அடிப்படை விபரங்களை கண்டிப்பாக தாக்கல் செய்ய வேண்டும்.
  • 3 மாதங்களுக்கும் எடுக்கப்பட்ட கலர் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 3 இருக்க வேண்டும்.
  • உங்கள் பாஸ்போர்ட்டில் உள்ள பயோடேட்டா பக்கத்தின் நகல் இணைக்கப்பட வேண்டும். நீங்கள் பயணம் செய்யும் சமயத்தின் போது குறைந்தபட்சம் 6 மாதங்களாவது அந்த பாஸ்போர்ட் செல்லுபடி ஆக தக்கதாக இருக்க வேண்டும்.
  • விசாவுடன் நீங்கள் எதற்காக சிங்கப்பூர் செல்கிறீர்கள், பயணம் செய்யும் தேதி மற்றும் நேரம், செய்யும் வேலை குறித்த விபரம், நீங்கள் எங்கெல்லாம் செல்ல திட்டமிட்டுள்ளீர்கள் என்ற பயண திட்ட விபரம், மொத்தம் எத்தனை நாட்கள் சிங்கப்பூரில் தங்க போகிறீர்கள் என்ற விபரம், தேவையான டாக்குமென்ட் ஏதாவது நீங்கள் சமர்பிக்காமல் இருந்தால் அதற்கான காரணம் ஆகிய மொத்தம் விபரங்கள் அடங்கிய கவர் லெட்டரை விசா விண்ணப்பத்துடன் அளிக்க வேண்டும்.
  • சிங்கப்பூருக்கு பயணம் செல்லும் நாளுக்கு 30 நாட்களுக்கு முன்னதாக சிங்கப்பூருக்குள் நுழைவதற்கான என்ட்ரி விசா பெறுவதற்கு விண்ணப்பம் செய்ய வேண்டும்.
  • விசா அல்லது மாஸ்டர் கிரெடிட் அல்லது டெபிட் கார்டை பயன்படுத்தி 30 சிங்கப்பூர் டாலர்கள் கட்டணம் செலுத்தி ஆன்லைன் வழியாக விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும். இந்த கட்டண தொகை திரும்பத் தரப்படமாட்டாது.

சிங்கப்பூருக்குள் நுழைய அவசியம் தேவைப்படுபவை :

  • சிங்கப்பூர் அரைவல் கார்டு எனப்படும் SGAC கண்டிப்பாக உடன் வைத்திருக்க வேண்டும்.
  • கையில் 20,000 சிங்கப்பூர் டாலர்களுக்கு அதிகமாக வெளிநாட்டு பணத்தை எடுத்துச் செல்வதாக இருந்தால் அதற்கு CBNI எனப்படும் தடையில்லா அனுமதி சான்று பெற வேண்டும்.
  • சிங்கப்பூர் வரும் இந்தியர்களுக்கு டிராவல் இன்சூரன்ஸ் கட்டாயம் கிடையாது.
  • சிங்கப்பூர் செல்வதற்கு, அங்கிருந்து இந்தியா திரும்பி வருபதற்குமான விமான டிக்கெட் வைத்திருக்க வேண்டும்.
  • விசா தொடர்பான அனைத்து நடைமுறைகளையும் முடிக்கும் அளவிற்கு தேவையான பணம் வைத்திருக்க வேண்டும்.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்!

Related posts