TamilSaaga

சிங்கப்பூர் அரசின் புதிய உத்தரவு: இனி இந்தியர்கள்  இந்த துறையிலும் வேலை பார்க்கலாம்!!!

சிங்கப்பூர்: சிங்கப்பூர் தனது துணை காவல் படைக்கு ஆட்களை நியமிக்கும் திட்டத்தை விரிவுபடுத்தி உள்ளது. இதன் மூலம், இந்தியா, சீனா, இலங்கை, மியான்மர் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து துணை காவல் அதிகாரிகள் பணியமர்த்தப்பட உள்ளனர்.

உள்துறை அமைச்சரின் அறிவிப்பு: இரண்டாம் உள்துறை அமைச்சர் ஜோசஃபின் தியோ இன்று நாடாளுமன்றத்தில் இது குறித்து விவரம் தந்தார். இந்த நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள் தீவு முழுவதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் காவல்துறைக்கு உதவுவர். விமான நிலைய முனையங்கள், வங்கிகள் மற்றும் முக்கிய தேசிய நிகழ்ச்சிகளில் துணை காவல் அதிகாரிகள் பணியாற்றுவதைப் பார்க்கலாம் என்று அவர் கூறினார்.

முக்கிய அம்சங்கள்:

இந்த அதிகாரிகள் சிங்கப்பூரின் விமான நிலையங்கள், வங்கிகள், முக்கிய தேசிய நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக காவல்துறைக்கு உதவுவார்கள்.

துணைக் காவல் அதிகாரிகளில் பெரும்பாலோர் சிங்கப்பூரர்களே ஆவர் என்ற நிலை தொடரும் என்றும் உள்துறை அமைச்சு உறுதியளித்துள்ளது.
சிங்கப்பூரின் முழுத் தீவுக்கும் பாதுகாப்பு மேம்படுத்தப்படும்.

துணை காவல் படையின் முக்கியத்துவம்: துணை காவல் அதிகாரிகள் சிங்கப்பூரின் உள்நாட்டு பாதுகாப்பு தேவைகளைப் பூர்த்தி செய்வதில் முக்கிய பங்காற்றுகிறார்கள். சிங்கப்பூரின் துணை காவல் படையில் உள்ளூர் அதிகாரிகளுடன், வெளிநாட்டு அதிகாரிகளும் இணைந்து பணியாற்றுவார்கள்.

சிங்கப்பூர் அரசின் நிலைப்பாடு: துணை காவல் அதிகாரிகளில் பெரும்பாலோர் சிங்கப்பூரர்களாகவே இருப்பார்கள் என்றும், அந்த நிலை தொடரும் என்றும் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

முந்தைய நியமனங்கள்: ஏற்கனவே 2017 ஆம் ஆண்டு முதல் மலேசியா, தைவான் போன்ற இடங்களிலிருந்து துணை காவல் அதிகாரிகள் வேலைக்குச் சேர்க்கப்படுகின்றனர். சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை இம்மாதம் அதன் அவசரகால மருத்துவச் சேவைகளுக்கும் வெளிநாட்டினரை வேலைக்குச் சேர்க்க திட்டமிட்டுள்ளது.

இது மக்களின் பாதுகாப்பு தரத்தை மேலும் உயர்த்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. உங்கள் திறமைகளுக்கு சரியான வேலை வாய்ப்பை பெறுங்கள்!

Related posts