பிரபல Hong Kong Dim Sum உணவகமான ஆசியா கிராண்ட் ரெஸ்டாரன்ட் அதன் ஓடியன் டவர்ஸ் வளாகத்தை விரைவில் காலி செய்ய இருக்கின்றது. கடந்த ஜனவரி 4 வெளியான ஒரு Facebook பதிவில், அந்த உணவகம் அதன் குத்தகை காலம் முன்கூட்டியே நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பிப்ரவரி 15, 2022 அன்று அதன் செயல்பாடுகளை நிறுத்துவதாக அறிவித்தது. மேலும் அதன் இடமாற்றத் திட்டம் “இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை” என்றும் அந்த உணவகம் மேலும் கூறியது குறிப்பிடத்தக்கது.
இந்த உணவகம் கடந்த 2007ம் ஆண்டு முதல் இந்த சிட்டி ஹால் கட்டிடத்தில் உள்ளது என்பது நினைவுகூரத்தக்கது. முன்னதாக, இது ஸ்காட்ஸ் சாலையில் உள்ள ஹோட்டல் ஏசியா வளாகத்தில் அமைந்திருந்தது. அங்கிருந்த ஹோட்டல் இடிக்கப்பட்டது மற்றும் இப்போது Reignwood Hamilton Scotts condominium அங்கு உள்ளது. அந்த உணவகத்தின் வலைத்தள தகவலின்படி, ஆசியா கிராண்ட் உணவகம் 1980களில் மூன்று ஹாங்காங் உணவகமான Tsui Hang Village நிறுவனர்களால் இங்கு சிங்கப்பூரில் வழிநடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த உணவகம் பல்வேறு வகையான ஹாங்காங் டிம் சம் மற்றும் கான்டோனீஸ் உணவுகளை வழங்குகிறது. மேலும் S$48++ Peking Duck போன்ற வறுத்த உணவுகளுக்கு பெயர் பெற்ற உணவகமிது. பலருக்கு விருப்பமான இந்த உணவகம் வரும் பிப்ரவரி 15ம் தேதி சேவைகளை நிறுத்தவுள்ள நிலையில், கொண்டாட்ட விருந்துகளுக்கும் பெயர் பெற்ற ஏசியா கிராண்ட் ரெஸ்டாரன்ட் சீன புத்தாண்டு உணவுகளுக்கான முன்பதிவுகளுக்காக பிப்ரவரி 1 முதல் 15, 2022 வரை திறந்திருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முன்பதிவுகள் செய்ய 6887 0010 என்ற எண்ணை அழைக்கலாம்.
சிங்கப்பூரில், 331 நார்த் பிரிட்ஜ் சாலை #01-02 & #01-05/08 ஓடியான் டவர்ஸ் சிங்கப்பூர் 188720 என்ற இடத்தில் செயல்பாடும் இந்த உணவகம் கீழ் கண்ட நேரங்களில் திறந்திருக்கும்.
தொடக்க நேரம்:
திங்கள் முதல் சனிக்கிழமை வரை : காலை 11:30 முதல் மதியம் 3 மணி வரை
மற்றும் மாலை 6:30 முதல் இரவு 10:30 வரை
ஞாயிற்றுக்கிழமைகளில் : காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை
மற்றும் மாலை 6 மணி முதல் இரவு 10:30 மணி வரை செயல்பாடும்.