Singapore Annalakshmi Restaurant: என்னதான் வீட்டில் சமைத்தாலும், ஹோட்டலில் சென்று சாப்பிடுவது என்பது ஒரு அலாதி ஆசை தான். இங்கே வயசு வித்தியாசம் எல்லாம் கிடையாது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வெளியே சென்று விதவிதமான உணவுகளை ஒரு கை பார்க்க ஆசைப்படுவார்கள்.
அப்படி உணவை ஒரு கை பார்க்க வைக்கும் சிங்கப்பூர் அன்னலக்ஷ்மி உணவகம், மற்றவர்களுக்கு “கை”க்கொடுக்கும் உன்னத பணியை செய்து வருகிறது. அதுதான் இங்கு ஸ்பெஷல். அதுதான் இங்கு தனித்துவம்.
About Annalakshmi Restaurant
சேவை மனப்பான்மையில் வேர் வரை ஊறிய அன்னலக்ஷ்மி உணவகம், அர்ப்பணிப்புள்ள தன்னார்வலர்கள் மற்றும் முழுநேர சமையல் கலைஞர்கள் கொண்ட குழுவால் நடத்தப்படுகிறது. 1986 ஆம் ஆண்டு முதல், அன்னலக்ஷ்மி உணவகம் சிங்கப்பூர் சமூகத்திற்கு சுவையான வீட்டு பாணியிலான இந்திய சைவ உணவுகளை வழங்கி வருகிறது.
Annalakshmi Restaurant Social Service
அன்னலக்ஷ்மி எனும் தெய்வத்தின் பெயரால், தனது அனைத்து விருந்தினர்களுக்கும் அதே முழு மனதுடன் தாராள மனப்பான்மையுடன் சேவை செய்து வருகிறது.
உணவகத்திலிருந்து கிடைக்கும் வருமானம் இந்தியாவின் கிராமப்புறங்களில் உள்ள பகுதிகளுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்ட பல்வேறு சமூக காரணங்களுக்காக அனுப்பப்படுகிறது.
2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சிங்கப்பூரில் சர்க்யூட் பிரேக்கர் (லாக் டவுன்) தொடங்கியதில் இருந்து, நோய்த் தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அன்னலக்ஷ்மி உணவகம் ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை தொடர்ந்து வழங்கி வருகிறது.
இதில் புலம்பெயர்ந்த தொழிலாளர் சமூகங்கள் (itsrainingraincoats), ஏழ்மையான குடும்பங்கள் (Willing Hearts and Food Bank), குறைந்த வருமானப் பின்னணியைச் சேர்ந்த மாணவர்கள் (சிராங்கூன் கார்டன் மேல்நிலைப் பள்ளி), சிறப்பு உணவுத் தேவைகளைக் கொண்ட முதியவர்கள் வரை (சன்லோவ், மோரல் வெல்ஃபேர் ஹோம், மெரண்டி ஹோம், மற்றும் நாராயண மிஷன்), மற்றும் சிறப்பு உணவுத் தேவைகளைக் கொண்ட முதியவர்கள் (வில்லிங் ஹார்ட்ஸ்) ஆகியோருக்கு உணவுகள் வழங்கப்பட்டுள்ளன.
இடம் & தொடர்பு கொள்ள வேண்டிய எண்
20 Havelock Rd, #01-04
Central Square, S059765
annagov@singnet.com.sg
+65 6339 9993
உணவகம் இயங்கும் நேரம்
Tuesday – Sunday
(closed on Mondays)
Lunch 11:30 am – 3:00 pm
Dinner 6:00 pm – 9:00pm
அன்னலக்ஷ்மி உணவகத்தின் ஸ்பெஷல் என்னவெனில், இங்கு நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஆனால், அதற்கான பில் வராது. அதற்கு பதில், நீங்களாகவே உங்களுக்கு கொடுக்க நினைக்கும் தொகையை கொடுக்கலாம். ஆனால், அவர்களுடைய உணவின் தரம், கவனிப்பு போன்றவை நிச்சயம் நீங்களாகவே நியாயமான தொகையை கொடுக்க வைத்துவிடும்.
ஏனெனில், நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு பணமும், எங்கேயோ வறுமையில் தவிக்கும் ஒருவரின் பசியை ஆற்றும்.