பொதுவாக உலக அளவில் உள்ள ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் குறிப்பிட்ட சில திட்டங்கள் மூலம் அதிக சலுகைகளை வழங்குவது உண்டு. அதாவது அடிக்கடி தங்கள் விமான சேவையை பயன்படுத்துபவர்களுக்கு விமான சேவை நிறுவனங்கள் சலுகைகளை தரும். அந்த வகையில் நமது நாட்டின் தேசிய விமான சேவை நிறுவனமான சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் “KrisFlyer” என்ற திட்டத்தின் மூலம் விமான பயணிகளுக்கு பல சலுகைகளை வழங்கி வருகின்றது.
KrsiFlyer என்பது பல ஆண்டுகளாக செயல்பாட்டில் உள்ள ஒரு சலுகை வழங்கும் திட்டமாகும். இதை பெறுபவர்களுக்கு பல வகையான சலுகைகள் வழங்கப்படுகிறது. அந்த வகையில் KrisFlyer உறுப்பினர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி வந்துள்ளது. இன்று திங்கட்கிழமை (ஆகஸ்ட் 25), சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) வெளியிட்ட ஒரு அறிக்கையில், செப்டம்பர் 1 முதல், அதன் விமானம் அல்லாத தளங்களான Kris+, KrisShop மற்றும் Pelago ஆகியவற்றை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை வழங்கவுள்ளது.
நவம்பர் 1ம் தேதி முதல், Access எனப்படும் புதிய சேவையை அறிமுகப்படுத்துவதாக SIA அறிவித்துள்ளது. இது KrisFlyer உறுப்பினர்கள் தங்கள் விருப்பமான விமானங்களில் உறுதிப்படுத்தப்பட்ட இருக்கைகளைப் பெற தங்கள் மைல்களைப் பயன்படுத்த அனுமதிக்கிறது. அதாவது KrisFlyer மூலம் பெரும் பாயிண்ட்ஸ்களை பயன்படுத்தி கூடுதல் கட்டணம் இல்லாமல் சீட் தேர்வு செய்ய முடியும்.
சிங்கப்பூரில் Recruitment Roadshow நடத்தும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் – எங்கே? எப்போது நடைபெறுகிறது?
இந்தியர்களுக்கு வரப்பிரசாதம்
இந்தியா உள்பட ஆசியா மற்றும் தென்மேற்கு பசிபிக் நாடுகளுக்கு சிங்கப்பூரில் இருந்து பயணிக்கும் KrisFlyer சந்தாதாரர்கள் ஒரு கூடுதல் சலுகை அளிக்கப்படுகிறது. மேற்கூறிய நாடுகளுக்கு “Economy Saverல்” பயணிக்கும்போது அவர்களுக்கு கிடைக்கும் புள்ளிகளில் இனி 5 சதவிகிதம் அதிகமாக கிடைக்கும். ஏற்கனவே நீங்கள் புக் செய்த டிக்கெட்டுகள் சலுகையை அக்டோபர் 31ம் தேதி வரை செயல்பாட்டில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.