SINGAPORE: அதிகரிக்கும் பயணிகளின் எண்ணிக்கை காரணமாக, ஜப்பான் மற்றும் இந்தியாவுக்கு இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கையை உயர்த்த உள்ளதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமம் (SIA) மற்றும் Scoot இன்று அறிவித்துள்ளது.
அக்டோபர் 30 மற்றும் மார்ச் 25 க்கு இடையில் northern winter operating season காலத்திற்கு தயாராகும் வகையில் விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று SIA தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சிங்கை சாங்கி விமான நிலையத்தில், வரும் செப்டம்பரில் டெர்மினல் 4 திறக்கப்படுவதும், வரும் அக்டோபரில் டெர்மினல் 2ல் செயல்பாடுகளை நீட்டிப்பதும் இந்த அதிகரிக்கப்படும் விமானங்களை கையாள ஏதுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்தின் (senior vice-president of marketing planning) JoAnn Tan கூறுகையில், நோய்த்தொற்று காரணமாக சில மாதங்கள் விமானங்கள் இயக்கப்படாத நிலையில், ஜப்பான் மற்றும் இந்தியாவுக்கான பயண தேவைகள் ரொம்பவே அதிகரித்துள்ளது.
அதன்படி, டோக்கியோவுக்கான விமானங்கள் வாரத்திற்கு 14 விமானங்களில் இருந்து 28 ஆக உயர்த்தப்படும், அதே நேரத்தில் நகோயாவுக்கு வாரத்திற்கு மூன்று முறை, ஃபுகுவோகாவுக்கு வாரத்திற்கு மூன்று முறை மற்றும் ஒசாகாவுக்கு இரண்டு முறை தினசரி சேவை இந்த திட்டத்தில் அடங்கும்.
ஆனால், இந்தியாவின் கதையே வேறு. இந்தியாவைப் பொறுத்தவரை, வரும் மாதங்களில் கொரோனாவுக்கு முன்பு எந்தளவுக்கு விமான சேவைகள் இருந்ததோ, அதை 100 சதவிகிதம் முழுமையாக திரும்பக் கொண்டுவருவதே SIA-ன் இலக்கு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், இந்தியா – சிங்கப்பூர் சந்தை என்பது மற்ற நாடுகளைக் காட்டிலும் மிக மிக முக்கியமானது.
அதன்படி, அக்டோபர் மாதத்திற்குள் அகமதாபாத்துக்கு வாராந்திர 5 விமானங்களும், பெங்களூருக்கு 16 வாராந்திர விமானங்களும், சென்னைக்கு 17 வாராந்திர விமானங்களும், டெல்லிக்கு தினசரி இரண்டு விமானங்களும், ஹைதராபாத்துக்கு தினசரி விமானங்களும், கொச்சிக்கு தினசரி விமானங்களும், கொல்கத்தாவுக்கு தினசரி விமானங்களும், மும்பைக்கு 16 வாராந்திர விமானங்களும் இயக்கப்படும் என்று SIA அறிவித்துள்ளது.
இது பெங்களூரு மற்றும் கொச்சி போன்ற நகரங்களுக்கான தற்போதைய சேவைகளை இரட்டிப்பாக்குவதைக் குறிக்கிறது, இப்போது வாரத்திற்கு ஏழு விமானங்கள் உள்ளன. இந்த ஆண்டு ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையில், இங்கு வந்த 540,000க்கும் அதிகமான மக்களில் 95,000க்கும் அதிகமானோர் இந்தியாவிலிருந்து வந்தவர்களே.
இதில், குறிப்பாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்தின் (senior vice-president of marketing planning) JoAnn Tan இந்தியாவுக்கான விமான போக்குவரத்து குறித்து பேசிய வார்த்தைகள் மிக முக்கியமானவையாக நாம் பார்க்க வேண்டியுள்ளது. ஆம்! ‘கொரோனாவுக்கு முன்பு இந்தியா – சிங்கப்பூர் இடையேயான விமான போக்குவரத்து எவ்வளவு இருந்ததோ, அதை மீண்டும் அடைவதே தங்களது இலக்கு’ என்று கூறியிருக்கிறார். அதாவது இந்திய சந்தை மீது Target வைத்து வேலை செய்கிறார்கள். காரணம், மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் இருந்து செல்லும் வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை மிக மிக அதிகம். அதேபோல், குடும்பம் குடும்பமாக இந்தியாவிலிருந்து சிங்கைக்கும், இங்கிருந்து இந்தியாவுக்கும் பயணம் அதிகம் மேற்கொள்வதும் இந்தியர்கள் தான். அதனால் தான் இந்திய மார்க்கெட் மிக அவசியமான ஒன்றாக சிங்கப்பூருக்கு தேவைப்படுகிறது.