TamilSaaga

சிங்கப்பூரில் நாலு காசு சம்பாதிக்கிறதுக்கு இப்படியும் அவமானப்பட வேண்டியிருக்கு! ரூல்ஸை மதிக்கச் சொன்ன தமிழக ஊழியர்.. லாரியை நிறுத்திவிட்டு இறங்கி வந்து அடித்த டிரைவர்!

SINGAPORE: கடந்த வியாழன் (அக். 13) அன்று ஜூரோங்கில் உள்ள ஒரு தளவாட மையத்தில் பாதுகாப்புக் காவலர் ஒருவர், டிரக் டிரைவரால் கடுமையாக தாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பாதுகாப்பு ஊழியர்களின் சங்கம் (யுஎஸ்இ) திங்களன்று வெளியிட்டுள்ள ஒரு பேஸ்புக் பதிவில், “திரு. சுரேஷ் சுப்ரமணியம் எனும் 51 வயதான மேற்பார்வையாளர், கடந்த வியாழன் அன்று காலை 9.20 மணியளவில் Pioneer Crescent-ல் உள்ள தளவாட மையத்தில் பணியில் இருந்தார்.

அப்போது அங்கு வந்த கன்டெய்னர் டிரக்-ன் டிரைவரிடம், அவர் நடைமுறைகள் மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றவில்லை என்று சுரேஷ் கூறியதற்கு அந்த டிரைவர் மிகக் கடுமையான வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

பிறகு, அந்த ஓட்டுநர் வளாகத்துக்கு வெளியே தனது கண்டெய்னர் லாரியை சாலையோரம் நிறுத்திவிட்டு, காவலர் சுரேஷிடம் சண்டைக்கு சென்றுள்ளார்.

ஒருக்கட்டத்தில் வாக்குவாதம் முற்ற, ஊழியர் சுரேஷை அந்த ஓட்டுநர் தாக்கினார். இதனால் அவரது முகத்தில் இரத்த காயங்கள் ஏற்பட்டன. தகவலறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைய, அந்த டிரைவர் அங்கிருந்து வெளியேறிவிட்டார்.

மேலும் படிக்க – நியாபக மறதி பிரச்சனை.. மொபைலில் “Reminder” வைத்து லாட்டரி வாங்கிய இந்தியருக்கு.. குலுக்கலில் விழுந்த 17 லட்சம் “ஜாக்பாட்” பரிசு!

சிங்கப்பூரில் ஸ்பியர் செக்யூரிட்டி ஃபோர்ஸில் பணிபுரியும் ஊழியர் சுரேஷ், இந்த சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் அளித்து, டாக்டரின் சிகிச்சை பெற்ற நிலையில், அவருக்கு மூன்று நாட்கள் விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, பாதுகாப்பு ஊழியர்களின் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரேமண்ட் சின், தலைவர் ஆர்டி அமீர் மற்றும் நிர்வாகச் செயலாளர் ஸ்டீவ் டான் ஆகியோர் திங்கள்கிழமை பிற்பகல் திரு சுரேஷை சந்தித்து சில மருந்துகளும், செலவுக்கான வவுச்சர்களையும் வழங்கினர்.

உண்மையில், ஊழியர் சுரேஷின் தோற்றத்துக்கு அவர் திருப்பி அடித்திருந்தால், அந்த டிரைவர் அங்கேயே சுருண்டு விழுந்திருப்பார். ஆனால், வெளிநாட்டில் வேலை செய்வதால், அதன் சட்ட திட்டங்களை மதித்து, திருப்பி தாக்காமல் காவல்துறையில் புகார் அளித்து திரு சுரேஷ் அவர்கள் கண்ணியத்துடன் நடந்து கொண்டார்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” தளத்தை பின்தொடருங்கள்

Related posts