இரண்டு ஆண்டுகள் கடந்தவிட்ட நிலையில் தற்போது மீண்டும் பல நாடுகளுக்கு இடையே விமான போக்குவரத்துக்கு சகஜமாக இயங்கி வருகின்றது. ஆனால் அதே சமயம் இந்த Omicron என்ற புதிய வகை வைரஸ் நம்மை மீண்டும் கடும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. சரி இது ஒருபுறம் இருக்க VTL சேவைகள் மூலம் இந்திய உள்ளிட்ட பல நாடுகளுக்கு தங்களுடைய சேவைகளை வழங்கி வருகின்றது சிங்கப்பூர். அதேபோல VTL அல்லாத சேவைகளையும் பிறநாடுகளுடன் அனுமதித்துள்ளது சிங்கப்பூர்.
இதையும் படியுங்கள் : எல்லைச் செயல்முறைகளை மேன்படுத்தும் ICA
இந்நிலையில் VTL அல்லாத சேவைகளை திருச்சி உள்பட இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து இயக்கி வரும் Scoot விமான சேவை நிறுவனம் தற்போது மீண்டும் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் “அன்புள்ள இந்தியாவே, ஹைதராபாத், திருச்சிராப்பள்ளி மற்றும் அமிர்தசரஸ் ஆகியவற்றுடன் சிங்கப்பூரின் விமானப் பயண Air Bubble-ஐ தொடர்ந்து, வரும் 28 டிசம்பர் 2021 முதல் திருவனந்தபுரத்திலிருந்தும், 29 டிசம்பர் 2021 முதல் கோயம்புத்தூர் மற்றும் விசாகப்பட்டினத்திலிருந்தும் விமானங்களை (VTL அல்லாதது) மீண்டும் தொடங்குவோம் என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறோம்” என்று கூறியுள்ளது.
Singapore – டிக்கெட் புக்கிங் செய்ய
“இந்த தென்னிந்திய நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு வெறும் 5500 இந்திய ரூபாயில் (ஒரு வழி, வரி உட்பட) இருந்து டிக்கெட்கள் கிடைக்கும். மூன்று கூடுதல் நகரங்களுக்கு எங்கள் விமானங்கள் இயக்கப்படுவதை கொண்டாடும் வகையில், எங்களின் தற்போதைய விற்பனையை ஹைதராபாத், திருச்சிராப்பள்ளி மற்றும் அமிர்தசரஸ் ஆகிய இடங்களுக்கும் 9 ஜனவரி 2022, 2159h வரை நீட்டிக்கவுள்ளோம்” என்றும் கூறியுள்ளது Scoot.