TamilSaaga

சிங்கப்பூரில் காருக்குள் சிக்கிய கைக்குழந்தை.. உதவி கேட்டு கதறிய தாய்.. 15 நிமிடத்தில் குழந்தையின் முத்தத்தை பரிசளித்த “ஹீரோஸ்”

சிங்கப்பூரின் Tiong Bahru பகுதியில் கடந்த ஜூன் 5ம் தேதி காலை 11:30 மணியளவில் Land Rover காரில் ஒரு பெண் வந்திறங்கினார். அவருடன் பணியாளர் பெண்ணும் வந்திறங்க, காரின் கதவுகள் தானாகவே மூடப்பட்டு லாக் ஆகிக் கொண்டன.

கொடுமை என்னவெனில், காரின் சாவியும், அப்பெண்ணின் 1 வயது குழந்தையும் காரில் மாட்டிக் கொள்ள, எவ்வளவோ முயற்சித்தும் காரின் கதவுகளை திறக்க முடியவில்லை. சிறுது நேரத்தில் சீட்டில் படுத்திருந்த குழந்தையும் அழ ஆரம்பித்துவிட்டது.

இதனால் பதறிய அந்த பெண், கூச்சலிட்டுக் கொண்டே அருகே இருந்த அனைவரிடமும் சென்று கெஞ்சி குழந்தையை மீட்டுத்தர உதவி கோரினார். ஆனால், யாரும் அப்பெண்ணுக்கு உதவ முன்வரவில்லை என்று Chinese daily செய்தித் தளம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் படிக்க – அன்று ஜெயலலிதா மட்டும் சிங்கப்பூர் வந்திருந்தால்… இன்று தமிழகத்தின் “தலையெழுத்தே” மாறியிருக்கும் – இது நிஜம்!

பிறகு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த Singapore Civil Defence Force (SCDF) வந்த அதிகாரிகள் காரை சுற்றி ஆய்வு செய்தனர். பிறகு, பின்பக்க கதவின் கண்ணாடியை கோடாரி போன்ற ஆயுதம் கொண்டு உடைத்தனர். கண்ணாடிகளும் மிக வலிமையாக இருந்ததால் பலமுறை ஓங்கி அடித்த பிறகு உடைந்தது. கதவும் திறக்கப்பட்டது.

இந்த அனைத்து செயல்களும் 15 நிமிடங்களில் முடிந்துவிட்டன. குழந்தையை வெளியே எடுத்த பின் அள்ளி அணைத்த அந்த பெண், குழந்தைக்கு கண்ணீருடன் முத்தமிட்டது காண்போரை நெகிழச் செய்தது. குழந்தைக்கு எந்த காயமும் ஏற்படாமல் காப்பாற்றிய அதிகாரிகளுக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டன.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts