சிங்கப்பூரின் ஆயுதப்படை இராணுவ நாய் பிரிவில் (SAF MWDU) 20 ஓய்வுபெற்ற மூத்த இராணுவ நாய்களை நேற்று செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 22, 2021 வரை தத்தெடுப்பதற்காக மக்கள் தற்போது தங்களை அணுகலாம் என்று MINDEF என்று அழைக்கப்படும் சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சகம் தனது முகநூலில் தகவல் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்ட பதிவில் “இந்த நாய்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் நாட்டிற்காக கடினமாக உழைத்துள்ளன. இப்போது அவர்கள் ஓய்வெடுக்கவும், அன்பை பிரதிபலிக்கவும் ஒரு வீட்டைத் தேடுகிறார்கள். சிங்கப்பூர் ஆயுதப்படை இராணுவ வேலை நாய் பிரிவின் வருடாந்திர தத்தெடுப்பு இயக்கம் மீண்டும் 13 ஓய்வு பெற்ற நாய்களுடன் சொந்தங்களை தேடுகிறது.
அவற்றில் சில HDB- அங்கீகரிக்கப்பட்டவை, எனவே உங்கள் வீட்டிலும் உங்கள் இதயத்திலும் உங்களுக்கு இடம் இருந்தால், இந்த அன்பான மற்றும் விசுவாசமுள்ள நாய்களில் ஒன்றிற்கு உங்கள் வீட்டு கதவுகளைத் திறக்கவும், அவர்களுக்குத் தேவையான புதிய குடும்பமாக இருங்கள். இந்த தத்தெடுப்பு இயக்கம் 27 செப்டம்பர் முதல் 22 அக்டோபர் வரை நடைபெறும்” என்று கூறியுள்ளது.
நீங்கள் இந்த லிங்கை கிளிக் செய்து இந்த நாய்களை உங்கள் செல்லப்பிராணிகளாக தத்தெடுக்களாம். 13 நாய்கள் தற்போது இந்த தத்தெடுப்பு நிகழவில் உள்ளது. அந்த நாய்கள் குறித்த தகவல்களை படித்து அறிந்து அதன் பிறகு பொதுமக்கள் தேர்வு செய்யலாம். HDB குடியிருப்பாளர்களாக இருக்கும் நாய் கையாளுபவர்கள் தங்கள் ஓய்வுபெற்ற சேவை நாய்களைத் தத்தெடுப்பதற்காக 2012ல் தொடங்கப்பட்ட திட்டம் தான் ADORE.
சிங்கப்பூர் போலீஸ் படை, சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படை (SCDF) K-9 பிரிவு மற்றும் SAF MWDU உடன் பணியாற்றிய நாய் கையாளுபவர்களுக்கு இது பொருந்தும். பிறகு கடந்த 2018ம் ஆண்டில், சிங்கப்பூரில் உள்ள அனைத்து HDB குடியிருப்பாளர்களையும் உள்ளடக்கியதாக இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.