வீடு பாதுகாப்பு சந்தா தொகையானது வீட்டின் உரிமையாளர் இறக்க நேரிட்டால் மீதமுள்ள கடன் தொகையை செலுத்த பயன்படுகிறது.
இதன் மூலம் மத்திய சேமநிதி கழகத்தில் உள்ள உறுப்பினர்கள் தங்கள் வீடுகளை தக்கவைத்துக்கொள்ள முடியும்.
இப்போது மத்திய சேமநிதி கழகத்தின் வீடு பாதுகாப்பு சந்தாவில் 10% கழிவு வழங்கப்பட்டு அந்த கொகை குறைக்கப்படுவதாக அறிவித்துள்ளது.
இந்த கழிவானது அடுத்த மாதம் முதல் அமலுக்கு வருகிறது.
எனவே அடுத்த மாதம் முதல் இந்த சேமநிதி கழகத்தில் உறுப்பினராக சேருபவர்கள் சந்தா தொகை ஏற்கனவே வசூலிக்கப்படுவதை விட 10% குறைவாக கட்டினால் போதுமானது.
புதிதாக சேருவோர்கள் மட்டுமல்லாமல் ஏற்கனவே உறுப்பினராக சந்தா செலுத்தி வந்தவர்களும் அடுத்த மாதம் முதல் குறைக்கப்பட்ட சந்தா தொகையை செலுத்தலாம் என கூறப்பட்டுள்ளது.
இதற்கு முன்பாக கடந்த 2018ல் சந்தாவில் கழிவு வழங்கப்பட்டது அதன்பிறகு தற்போது வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 545,000 சேமநிதி உறுப்பினர்கள் பயனடைவார்கள்.