TamilSaaga

சிங்கப்பூருக்கு STVPயில் தான் ராஜபக்ச வந்தார்.. அது நீடிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதா? – சிங்கை ICA விளக்கம்

முன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்சவின் குறுகிய கால விசிட் பாஸ் (STVP – Short Term Visit Pass) நீட்டிப்புக்கான விண்ணப்பங்கள் Case-by-Case அடிப்படையில் தான் மதிப்பிடப்படுகின்றன என்று சிங்கப்பூர் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) சில தினங்களுக்கு முன்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் சிங்கப்பூர் வருகையை குறித்த ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் வெளியிடப்பட்ட அறிக்கையில், அவர் வந்தபோது அவருக்கு STVP வழங்கப்பட்டதாக ICA தெரிவித்துள்ளது.

ராஜபக்ச தனிப்பட்ட பயணமாக சிங்கப்பூர் வந்துள்ளார் என்பதை ICA மீண்டும் வலியுறுத்தியது, “Social Visit மூலம் சிங்கப்பூருக்குள் இலங்கையிலிருந்து நுழையும் பார்வையாளர்களுக்கு பொதுவாக 30 நாட்கள் வரையிலான கால அளவு கொண்ட STVP வழங்கப்படும்” என்றும் ICA தெரிவித்தது.

சிங்கப்பூர் TOTO Draw.. நேற்று மாலை நடந்த குலுக்கல்.. S$2,835,750 குரூப் 1 பரிசை தட்டிச்சென்ற இரு அதிர்ஷ்டசாலிகள் – அடுத்த Draw எப்போது?

மேலும் அந்த 30 நாட்களுக்கு மேல் சிங்கப்பூரில் தங்கியிருக்க வேண்டியவர்கள் தங்கள் STVPன் நீட்டிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அப்படி விண்ணப்பிக்கும் பட்சத்தில் அது Case-by-Case அடிப்படையில் மதிப்பிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Case-by-Case என்பது ஒரு தனிப்பட்ட விண்ணப்பத்திற்கு என்று மனிதிப்பு அளிக்காமல் வரிசைப்படி பாஸ்க்களை வழங்குவது என்று பொருள்.

கடந்த ஜூலை 14 அன்று சிங்கப்பூர் வந்தடைந்த சிறிது நேரத்திலேயே, திரு. ராஜபக்ச தனது ராஜினாமாவை மின்னஞ்சல் மூலம் சமர்ப்பித்தார். அதேபோல “அவர் சிங்கப்பூரிடம் புகலிடம் கேட்கவில்லை என்றும், அவருக்கு எந்தவித புகலிடமும் வழங்கப்படவில்லை” என்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் (MFA) அப்போது கூறியது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts