TamilSaaga

சிங்கப்பூரில் பட்டம் பெற்ற “சுப்ரீம் ஸ்டார்” மகன்.. நேரில் சென்று வாழ்த்துச்சொன்ன தாய் மற்றும் தந்தை – வெளியான கூல் Photos!

தமிழ் திரையுலகில் மிக பிரபலமான நடிகர்களில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் அவர்களுக்கு மிகசிறந்த இடமுண்டு. இவர் தமிழ் சினிமாவில் நடிக்க வந்த காலகட்டத்தில், ரஜினிகாந்த போல ஸ்டைலியும் கமல் போல சிறந்த நடிப்பையும் வெளிப்படுத்தியதால் அப்போது இவரை கமல்காந்த் என்றும் அழைப்பார்களாம்.

சரத்குமார் 1984ம் ஆண்டு சாயா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு பிறந்த பெண் தான் இன்று தமிழ் சினிமாவின் தலைசிறந்த நடிகையாக விளங்கும் வரலக்ஷ்மி. இந்நிலையில் சுமார் 16 ஆண்டுகள் கழித்து சாயாவை விவாகரத்து செய்துவிட்டு நடிகை ராதிகாவை திருமணம் செய்துகொண்டார்.

2004ம் ஆண்டு ராதிகா மற்றும் சரத்குமாருக்கும் பிறந்த மகன் தான் ராகுல், சிறு வயது முதலே படிப்பில் கெட்டிக்காரரான ராகுல் தற்போது நமது சிங்கப்பூரில் உள்ள United World College of South East Asia என்ற தனியார் கல்லூரியில் படித்து முடித்து பட்டம் பெற்றுள்ளார்.

இந்த மகிழ்ச்சியான நேரத்தில் ராதிகா மற்றும் சரத்குமார் ஆகிய இருவரும் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர். மகன் மற்றும் மனைவியோடு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைத்தளங்களிலும் அவர் பகிர்ந்துள்ளார்.

சிங்கப்பூரில் உருவெடுக்கும் புது வகை மோசடி.. போலி மின்னஞ்சல் குறித்து எச்சரிக்கும் MOM – வெளிநாட்டு ஊழியர்களே உஷார்!

ராதிகாவும் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது மகன் குறித்து மிகவும் பெருமைப்படுவதாக தெரிவித்துள்ளார். நீண்ட ஆயுளோடு மென்மேலும் அவர் வளரவேண்டும் என்றும் அவர் அந்த பதிவில் கூறியுள்ளார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts