டோக்கியோ ஒலிம்பிக்கில் 200 மீட்டர் Butterfly நீச்சல் அரையிறுதியில் குவா ஜெங் வென் இடம் பெறவில்லை.
டோக்கியோ அக்வாடிக்ஸ் மையத்தில் நேற்று (ஜூலை.26) 200 மீட்டர் Butterfly பிரிவு போட்டியில் சிங்கப்பூரின் சார்பில் குவா ஜெங் வென் 1: 56.42 என்ற நேரத்தில் தனது நீச்சல் போட்டியை நிறைவு செய்தார்.
அவர் மொத்தம் உள்ள 38 போட்டியாளர்களில் 22 வது இடத்தைப் பிடித்தார். அதனால் அவர் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பினை இழந்தார்.
அவரது போட்டிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய குவா, அவர் “ஏமாற்றமடைந்தார்” என்று தெரிவித்தார். “நான் அநேகமாக வெளியுலகை மீண்டும் பார்க்கப் போகிறேன் என்று நினைக்கிறேன்,” என்று அவர் அரையிறுதியில் தோற்றதைப் பற்றி கூறினார்.
“கடந்த ஒலிம்பிக்கில் இருந்து பார்க்கையில் இது நான் சென்ற வேகமான ஒரு போட்டி. இந்த பந்தயத்திற்கு எவ்வாறு பயிற்சி செய்வது என்பதைக் கண்டுபிடிக்கும் ஒரு பயணம் இது” என்று குவா கூறினார்.
இன்னும் சிறப்பாக நடந்திருக்கலாம் என்று தான் விரும்வதாக அவர் கூறினார். “அனால் அது தன விளையாட்டின் அழகு, என்ன நடக்கும் என்று உங்களுக்குத் தெரியாது.” என்றும் அவர் தனது பேச்சில் குறிப்பிட்டார் .