TamilSaaga

நடனமாடி Vote கேட்ட மாணவி.. கிரங்கிப் போன சிங்கப்பூர் சமூக வலைத்தளங்கள்.. குவிந்த ஓட்டுகள் – சாதித்து காட்டிய SAJC ஸ்டுடென்ட் “பிரியங்கா”

சிங்கப்பூரில் கடந்த பிப்ரவரி மாத பிற்பகுதியில், செயின்ட் ஆண்ட்ரூஸ் ஜூனியர் கல்லூரியை சேர்ந்த (SAJC) மாணவி பிரியங்கா, SAJCன் மாணவர் மன்றத்தில் இடம் பிடிப்பதற்காக தற்போது தேர்தல் நடந்து வருவதாகவும். அதில் ஜெயிக்க மக்கள் தனக்கு வாக்களிக்குமாறும், கேட்டுக்கொண்டார். ஆனால் அவர் வாக்கு கேட்க பயன்படுத்திய முறை கொஞ்சம் வித்தியாசமானது. துள்ளல் இசையில் “ராப் பாடல்” மூலம் TikTokல் தன்னுடைய நடனத்தை வெளிப்படுத்தி சிங்கப்பூர் இணையத்தில் ஒரு புயலை கிளப்பினார் பிரியங்கா என்றே கூறலாம்.

இந்நிலையில் இணையத்தில் இந்த வீடியோ புகழ்பெற்றது ஒருபுறம் இருக்க, பிரியங்கா எதற்காக இந்த வீடியோவை வெளியிட்டாரோ அந்த காரியம் ஈடேறியுள்ளது. ஆம் மாணவர் பேரவைக்கு தான் தெரிந்தெடுக்கப்பட்டுள்ளதாக மார்ச் 4 அன்று வெளியிட்ட ஒரு அறிவில் அவர் இதை கூறியுள்ளார்.

மார்ச் 27 முதல் சர்வதேச விமான சேவைகளுக்கு அனுமதி.. சிங்கப்பூரில் இருந்து இனி ஈஸியா இந்தியா போகலாம் – ஆனா டிக்கெட் கேன்சல் செய்தால் Refund கிடைக்குமா?

பிரியங்கா, Spice Girls “Wannabe” என்ற பிரபலமான பாடலை தான் Tik Tok செய்து வெளியிட்டார். அந்த வீடியோவை பார்த்த பலர் அதன் மூலம் ஈர்க்கப்பட்டு நிச்சயம் நீங்கள் விரும்பும் அந்த காரியம் நிறைவேறும் என்று கமெண்ட்களை அள்ளித்தெளித்தனர். இதனை அடுத்து மார்ச் 4 அன்றி வெளியான இன்னொரு TikTok பதிவில் தான் ஜெய்த்துவிட்டதாகவும், தனக்குக் கிடைத்த ஆதரவு மற்றும் வழிகாட்டுதல் என்று அனைத்திற்கும் பிரியங்கா தனது நன்றியையும் தெரிவித்தார்.

மேலும் “அளிக்கப்பட்ட ஊக்கத்திற்கு SG TikTokக்கு நன்றி என்றும், இந்த நிகழ்வு மதிப்புமிக்க பல நல்ல பாடங்களைக் எனக்கு கற்பித்துள்ளது” என்று அவர் மேலும் கூறினார். “மாணவர் அமைப்பிற்கு தொடர்ந்து ஆர்வத்துடன் சேவை செய்வேன்!” என்று அனைவருக்கும் உறுதியளித்தார் ப்ரியங்கா. பிரியங்காவின் நன்றி கூறும் வீடியோவும் மக்களிடமிருந்து பெரும் உற்சாகத்துடனும் ஊக்கத்துடனும் வரவேற்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான மக்கள் வாழ்த்துச் செய்திகளுடன் அவரை சந்தோஷக கடலில் மூலக்கடித்துள்ளனர்.

சிங்கப்பூர் வரும் புலம்பெயர்ந்த மக்கள்.. “எங்களோடு ஒருவராக ஒன்றிணைந்து வாழுங்கள்” – பாசத்தோடு கூறிய சிங்கப்பூர் பிரதமர் லீ

பிரியங்காவின் ஒரிஜினல் ராப் பாடலான – “I Put ‘P’ in emPathy – சில வாசகர்களை பிரியங்காவை மாணவர் கவுன்சில் தலைவராக அல்லது சிங்கப்பூரின் எதிர்கால ஜனாதிபதியாக அல்லது பிரதமராக கூட அணி திரட்ட ஊக்குவித்துள்ளார்கள். பிரியங்காவின் அந்த ஒரிஜினல் ராப் வீடியோ 1.3 மில்லியன் முறை பார்க்கப்பட்டு, 1,02,000 க்கும் அதிகமான விருப்பங்களையும் கிட்டத்தட்ட 8,000 ஷேர்களையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts