சிங்கப்பூர் அரசு இங்கு தங்கி பணிபுரியும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு என்று பிரத்தியேகமாக பல முன்னெடுப்புகளை தொடர்ச்சியாக செய்து வருகின்றது. அந்த வகையில் PCP எனப்படும் Primary Care Planனின் (முதன்மை பராமரிப்பு திட்டத்தின்) கீழ் இனி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எளிதில் மருத்துவர்களை அணுக முடியும்.
இந்த தொற்றுநோய்க்கு முந்தய காலகட்டத்தில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் குடியிருப்புக்கு அருகில் உள்ள மற்றும் மலிவு விலை சுகாதார சேவைகளை அணுகுவதில் சிக்கல் இருந்தது. இந்நிலையில் PCP அந்த பிரச்சனைகளை தீர்த்துவைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
PCP என்றால் என்ன? அதை எப்படி பெறவேண்டும்?
சிங்கப்பூர் வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் முதலாளிகள் தான் அவர்களுக்கு இந்த PCPஐ பெற்றுத்தரவேண்டும். Primary HealthCare System கடந்த ஏப்ரல் 1 2022 அன்று அப்டேட் செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த முடிவை மனிதவள அமைச்சகம் எடுத்துள்ளது.
Anchor Operators (AOs) எனப்படும் மையங்களின் மூலம் தொழிலாளர்களின் முதலாளிகள் இந்த PCPஐ பெற முடியும்.
PCP யாருக்கெல்லாம் அவசியம்?
பணி அனுமதி வைத்திருப்பவர்களுக்கும் (புலம்பெயர்ந்த வீட்டு பணியாளர்களை தவிர்த்து) S Pass வைத்திருப்பவர்களுக்கும் PCP கட்டாயம். குறிப்பாக Dormitoryயில் தங்கியிருக்கும் மற்றும் CMP துறைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு இது கட்டாயம்.
Dormitoryயில் இல்லாமல் சமூகத்தில் வசிக்கும் மற்றும் CMP அல்லாத துறைகளில் பணிபுரியும் பணி அனுமதி அல்லது S பாஸ் வைத்திருப்பவருக்கு PCP, அவர்கள் விருப்பத்தை பொறுத்து எடுத்துக்கொள்ளலாம்.
இருப்பினும், எதிர்பாராத சுகாதாரப் பாதுகாப்பு பில்களுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பிற்காக உங்கள் பணியாளர்களுக்கு PCP ஐ வாங்குமாறு MOM அறிவுறுத்தியுள்ளது.
இந்த PCPஐ பயன்படுத்தி ஒரு புலம்பெயர்ந்த தொழிலாளி நேரில் மருத்துவரை எப்படி அணுகுவது?, Online மூலம் எப்படி மருத்துவரை அணுகுவது என்பது குறித்த விளக்க வீடியோ ஒன்றை மனிதவள அமைச்சகம் தற்போது வெளியிட்டள்ளது.
நிச்சயம் சிங்கப்பூர் வாழ் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களுக்கு அளிக்கப்படும் சேவைகளை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.