டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகள் வருகின்ற 23ம் தேதி துவங்கி நடக்க உள்ளது. இதில் கலந்துகொள்ள 21 விளையாட்டு வீரர்கள் 10 போட்டிகளில் தேர்வாகி உள்ளனர். அதில் சில வீரர்களை இன்று சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப் (Halimah Yacob) சந்தித்து பேசி அதனை பற்றி தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
கடுமையான கொரோனா சூழலிலும் விளையாட்டு வீரர்கள் பல சவால்களுக்கு மத்தியில் பயிற்சிகளை மேற்கொண்டு பயணக்கட்டுப்பாடுகள் போன்றவற்றில் கவனம் செலுத்தினார்கள். இவர்கள் அர்பணிப்பும் உழைப்பும் பாராட்டத்தக்கது.
டீம் சிங்கப்பூரை (TeamSg) ஆதரித்து ஊக்குவிக்க நான் இந்த மாத இறுதியில் டோக்கியோவில் இருக்க விரும்பியிருந்தேன். ஆனால் கோவிட்-19 கட்டுப்பாடுகளால் அது சவாலாக மாறியுள்ளது. உடலளவில் நேரில் ஆதரவினை தெரிவிக்க முடியாத நிலை உள்ளது. OneTeamSG க்கு பின்னால் தொடர்ந்து அணிவகுத்துச் செல்வார்கள் என தனது பதிவில் தெரிவித்துள்ளார்.