வாகன ஓட்டிகள் சாலையில் வண்டியினை ஓட்ட அனுமதிக்கப்படுவதற்கு முன்பு சிங்கப்பூரின் போக்குவரத்து காவல்துறை (TP) நடத்தும் போக்குவரத்து விதிகளின் theory testsகளில் தேர்ச்சி பெறுவது அவசியம். இதற்கு மையங்களுக்கு நேரடியாக சென்று பயிற்சி செய்வதை விட ஆன்லைனில் டெஸ்ட்களுக்கு பயிற்சி பெறுவது மிகவும் வசதியானது.
போக்குவரத்து காவல்துறை வெள்ளிக்கிழமையன்று ஆன்லைனில் Mock theory testகளை அறிமுகப்படுத்தும், இது அனைத்து சிங்பாஸ் கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் ஓட்டுநர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு இலவசமாக லாகின் செய்து கொள்ளும் வசதியை கொடுக்கிறது. அனைத்து சிங்கப்பூர் குடிமக்கள், நிரந்தர குடியிருப்பாளர்கள் மற்றும் வெளிநாட்டு அடையாள எண் கொண்ட வெளிநாட்டினர் சிங்பாஸ் கணக்குகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
இதையும் படிங்க: சிங்கப்பூரின் மிகப்பெரிய வங்கியான DBS சேவை முடங்கியது… பண பரிவர்த்தனை செய்ய முடியாமல் வாடிக்கையாளர்கள் திண்டாட்டம்!
மாலை 6 மணி முதல் நடைபெறும் இந்தத் தேர்வுகளை ஆங்கிலம், சீனம், மலாய் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் எழுதலாம். சிங்கப்பூர் காவல் படையின் இ-சேவைகள் பக்கம் மற்றும் TP ஆன்லைன் கற்றல் இணையதளங்களில் இருந்து அவற்றை பயன்படுத்த முடியும்.
Mock testகளை மேற்கொள்பவர்கள், 50 நிமிடங்களுக்கு 50 mcq கேள்விகள் கேட்கப்படும். மேலும் 10 நிமிடங்கள் இருக்கும் போது பாப்-அப் நினைவூட்டல்கள் வசதியும் இருக்கும்.
பயனர்கள் தங்களின் Mock testகளை ரிவியூ செய்யவும், தவறாகப் பதிலளிக்கப்பட்ட கேள்விகளுக்கான சரியான பதில்களைக் கற்றுக்கொள்ளவும் அனுமதிக்கப்படுவார்கள். ஆர்வமுள்ள வாகன ஓட்டிகள் ஒவ்வொரு அடிப்படை, இறுதி மற்றும் riding theory testsகளில் தேர்ச்சி பெற குறைந்தது 45 கேள்விகளை சரியாகப் செய்ய வேண்டும். அவர்கள் விரும்பும் போதெல்லாம் Mock test கலந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: டிப்ளமோ படித்துவிட்டு சிங்கப்பூர் வரப்போறீங்களா? உங்களுக்கு கண்டிப்பா தங்க கம்பளம் தான்… சம்பளம் கூட $3000 சிங்கப்பூர் டாலர் வரை இருக்குமா?
முன்னதாக, Mock test கேள்விகள் அதிகாரப்பூர்வமற்ற வலைத்தளங்கள் அல்லது மொபைல் ஃபோன் பயன்பாடுகளில் மட்டுமே ஆன்லைனில் கிடைக்கும். Mock testகள் தனியார் வெளியீட்டாளர்களால் புத்தகங்களில் தொகுக்கப்படுகின்றன மற்றும் ஓட்டுநர் மையங்களில் நியமிக்கப்பட்ட கணினி டெர்மினல்களில் எடுக்கப்படலாம்.
சிங்கப்பூரில், வாகன ஓட்டிகள் தங்கள் நடைமுறைப் பாடங்களைப் படிக்கும் முன் எடுக்கப்படும் அடிப்படைக் theory testக்கான தேர்ச்சி விகிதங்கள், சோதனை மையத்தைப் பொறுத்து மாறுபடும்.
ComfortDelGro ஓட்டுநர் மையத்தில் முதல் முறையாக தேர்வானவர்கள் 2022ல் 78.6 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் மிக மோசமாக இருந்தனர். புக்கிட் பாடோக் ஓட்டுநர் மையத்தில் உள்ளவர்கள் 98.1 சதவீத தேர்ச்சி விகிதத்தைப் பெற்றதாக சிங்கப்பூர் காவல் படையின் தரவுகள் தெரிவிக்கின்றன.
அனைத்து வாகன ஓட்டிகளும், கற்றுக்கொள்பவர்கள் மட்டுமின்றி, சாலை போக்குவரத்து விதிகள் மற்றும் சாலைகளில் விரும்பத்தக்க நடத்தைகள் குறித்து mock test தளம் மூலம் புதுப்பித்துக்கொள்ள முடியும் என்று போக்குவரத்து காவல்துறை.