சிங்கப்பூர் போலீஸ் படையின் (SPF) விசாரணை அதிகாரி ஒருவர் வாகனம் ஓட்டும்போது சரியான கவனத்துடன் செயல்படாத நிலையில், 84 வயதான பாதசாரி ஒருவர் மீது மோதி அதனால் அவர் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து 44 வயதான நோராஸ்லான் அப்துல் அஜீஸுக்கு வெள்ளிக்கிழமை (அக்டோபர் 22) இரண்டு வார சிறைத்தண்டனையும், ஐந்து வருடங்களுக்கு வாகனம் ஓட்ட தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
சோவா சு காங் அவென்யூ 1-ல் நடந்த இந்த சம்பவத்தில் அந்த போலீஸ் அதிகாரி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். கடந்த செப்டம்பர் 21, 2017 அன்று மாலை 4.20 மணியளவில், சோவா சு காங் அவென்யூ 1, பிளாக் 808-ல் உள்ள பல மாடி கார் பார்க்கிங்கில் இருந்து தனது காரை ஓட்டிச் சென்றதாக நீதிமன்றம் கூறியது. அவர் பிளாக் 807D, சோவா சு காங் அவென்யூ 1ல் இருவழிச் சேவை சாலை வழியாகச் வாகனத்தை செலுத்தியுள்ளார்.
அப்போது பாதிக்கப்பட்ட அந்த 84 வயது பெண், சர்வீஸ் சாலைக்கும் மெயின் ரோட்டுக்கும் இடையே நடைபாதையில் நடந்து சென்று கொண்டிருந்தார். HDB தொகுதிகள் மற்றும் சோவா சூ காங் அவென்யூ 1 இன் பிரதான சாலையை இணைக்கும் வெளியேறும் வழியாக அந்த மூதாட்டி சாலையை கடக்கத் தொடங்கினார், மேலும் அவர் சாலையை கடந்தது நோரஸ்லானுக்குத் நன்றாக தெரியும் என்றும் நீதிமன்றம் கூறியது. இருப்பினும், நோராஸ்லான் அந்த மூதாட்டியை சரியாக கவனிக்கவில்லை. வெளியேறும் இடத்தில் நிறுத்தக் கோடு இருந்தது, ஆனால் அவர் வேகத்தை குறைக்கவோ வண்டியை நிறுத்தவோ இல்லை.
இதனால் அவரது காரின் முன்பக்க இடது பகுதி அந்தப் பெண் மீது மோதியது, அந்த மூதாட்டி நிலைகுலைந்து சாலையில் விழுந்தார். உடனைடியாக தனது காரை நிறுத்தி அவர் அந்த மூதாட்டியை நோக்கி ஓடியதாகவும் கூறப்படுகிறது. உச்சந்தலையில் பெரிய காயங்கள் மற்றும் முகத்தில் பெரிய மற்றும் தலையில் காயங்களுடன் அந்தப் பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பிறகு சில மணிநேரங்களில் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.