SINGAPORE: நாம் மீண்டும் மீண்டும் சொல்லும் ஒரே விஷயம்.. நீங்க சிங்கப்பூரில் வேலைக்கு வர அங்க இங்க கடன் வாங்கி ஏஜெண்டுக்கு கொடுக்கும் பணம் 100% உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கணும் என்பது தான். வட்டிக்கு கடன் வாங்கி பணம் கொடுப்பது என்பது சாதாரண விஷயமல்ல.
அதேபோல், பொதுவாக எல்லா ஏஜெண்ட்டுகளை குறை சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை. ஏனெனில், சிங்கப்பூரில் உள்ள நிறுவனங்களே, ஏஜெண்டுகளை வைத்து தான் வேலைக்கு வெளிநாட்டு ஊழியர்களை தேர்வு செய்கின்றனர். அவர்கள், சிங்கப்பூர் மனிதவளத்துறை அமைச்சகத்துடன் இணைப்பில் உள்ள ஏஜெண்ட்டுகளை அணுகுகிறார்கள். அந்த ஏஜெண்ட்டுகள் இந்தியாவில் உள்ள ஏஜெண்ட்டுகளை அணுகுகின்றனர். இதுதான் வித்தியாசம்.
சரி.. நீங்கள் இப்போ சிங்கப்பூரில் வேலைக்கு வர ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறீர்கள் என்றால், இந்த செய்தி உங்களுக்கு தான். ஆம்! ஏஜெண்ட் மூலம் உங்களது விசா வந்துவிட்டது எனில், நீங்கள் மிகவும் உஷாராக இருக்க வேண்டிய அல்லது செயல்பட வேண்டிய தருணம் இதுதான்.
ஏஜெண்ட்டிடம் பணம் செலுத்தினால் தான் அவர்கள் உங்களுக்கான விசாவை ஏற்பாடு செய்து கொடுப்பார்கள். மிக சிலர் ஏஜெண்ட்ஸ் மட்டும் இதில் விதிவிலக்கு. ஒரு குறிப்பிட்ட தொகையை மட்டும் வாங்கிக் கொண்டு, மீத தொகையை விசா வந்த பிறகு உங்களிடம் பெற்றுக் கொள்வார்கள்.
இதில், முடிந்த அளவு இரண்டாவது முறையை நீங்கள் பின்பற்ற பாருங்கள். ஏஜெண்ட்டுகள் முழு பணத்தையும் கேட்டாலும், அவர்களிடம் முழு பணத்தையும் கொடுக்காமல் ‘பாதி மட்டுமே இப்போது கொடுக்கிறேன்.. மீதியை விசா வந்த பிறகு தருகிறேன்’ என்று முடிந்த அளவு டிமாண்ட் செய்து பாருங்கள்.
இப்போது IPA பித்தலாட்டங்களுக்கு வருவோம். போலி IPA என்பது இப்போதெல்லாம் அதிகமாகிவிட்டது. உண்மையான விசா எது, போலி எது என்று கண்டுபிடிக்கவே ஒருவர் டாக்டர் பட்டம் முடிக்க வேண்டும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அந்தளவுக்கு திருட்டுத்தனத்தில் அவ்வளவு பெர்ஃபெக்ஷன்.
ஸோ, உங்களுக்கான விசா வந்துவிட்டது என்று சொன்னால், நீங்கள் முதலில் செய்ய வேண்டிய விஷயம், அது உண்மையானதா என்று கண்டுபிடிப்பது மட்டுமே.
இதற்கு உங்கள் செல் ஃபோனில் mom.gov.sg என டைப் செய்து “Search” ஆப்ஷன் கொடுக்க வேண்டும். சிங்கப்பூர் மனிதவளத்துறையின் அதிகாரப்பூர்வ பக்கமான இதில், “eServices” என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். பிறகு ஓப்பனாகும் புதிய பக்கத்தில் ‘Application status via work permit one’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, ‘I agree’ கொடுத்துவிட்டு, என்டர் தட்டுங்கள். பின்னர் ‘enquiry’ என்பதை க்ளிக் செய்து, ‘Foreign worker details’ என்பதை OK செய்யுங்கள். அதன் பிறகு, NRIC No. Passport.No, மற்றும் பெயரை பதிவிடுங்கள்.
இறுதியாக “next” என்பதை க்ளிக் செய்து, ஓப்பனாகும் புதிய பக்கத்தில் உங்களது “IPA” நம்பரை டைப் செய்யுங்கள். அந்த பக்கத்திலேயே உங்களது IPA ‘Approved’ என்று வந்தால், உங்களது விசா ஒரிஜினல் என்று அர்த்தம். மாறாக, “Record not found” என்று வந்தால் உங்கள் விசா போலி என்பது உறுதி.
அப்படி, நீங்கள் தேடிப்பார்க்கையில் “Record not found” என்று வந்தும், ஏஜெண்ட் உங்களிடம் பணம் கேட்டால், அதற்கு மேல ஒரு பைசா கொடுக்க வேண்டாம். அதுமட்டுமின்றி, கொடுத்த பணத்தை திரும்ப வாங்கும் நடவடிக்கையிலும் உடனே ஈடுபடுங்கள்.