TamilSaaga

“சிங்கப்பூர் தாவரவியல் பூங்கா” : சட்டென்று தாக்கிய நீர்நாய் கூட்டம் – நிலைகுலைந்த நபருக்கு 26 கடிகள்

சமீபத்தில் சிங்கப்பூரில் உள்ள ஒருவர், தனது நண்பருடன் சிங்கப்பூர் தாவரவியல் பூங்காவில் காலை நடைப்பயிற்சி சென்று கொண்டிருந்தபோது, ​Otters எனப்படும் ​நீர்நாய் சந்திப்பில் தவறு ஏற்பட்டது. நீர்நாய்களின் ஒரு பெரிய கூட்டத்தின் எதிர்பாராத தாக்குதலால், அவரது உடலின் கீழ் பாதியில் சுமார் 26 கடி மற்றும் துளையிடப்பட்ட காயங்கள் ஏற்பட்டுள்ளன. அத்துடன் மீண்டும் அந்த பூங்காவிற்குத் திரும்புவதற்கான ஒரு வித பயத்தையும் இந்த சம்பவம் அவருக்கு ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள் : சிங்கப்பூரின் சிராங்கூன் பகுதி : மயிலால் தாக்கப்பட்ட சிறுமி

தனது 60களில் இருக்கும் கிரஹாம் ஜார்ஜ் ஸ்பென்சர் என்பவர் இங்கிலாந்திலிருந்து சிங்கப்பூர் வந்து இங்கு நிரந்தரக் குடியுரிமை பெற்றவர் அவர், கடந்த 2007 முதல் அவர் இங்கு வசித்து வருகிறார். பணிப்பெண் ஏஜென்சி ஒன்றின் உரிமையாளர், அளித்த தகவலின்படி கடந்த நவம்பர் 30 அன்று தாவரவியல் பூங்காவில் தனது தினசரி காலை 6 மணிக்கு நடைப்பயிற்சியை மேற்கொள்வதாக ஜார்ஜ் சென்றுள்ளார். காலை 6:45 மணியளவில், ஜார்ஜ் ஸ்பென்சரும் அவரது நண்பரும் தங்கள் நடைப்பயணத்தை முடித்துவிட்டு கார்டன்ஸ் நுழைவாயிலை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, ​​முன்னால் செல்லும் பாதையில் “பழுப்பு நிறப் பொருட்களின்” குழுவைக் கண்டார்.

அந்த குறிப்பிட்ட நேரத்தில் சூரியன் உதயமாகாததாலும், அப்பகுதியில் மிகவும் மங்கலான வெளிச்சம் இருந்ததாலும் மேலும் அவர் கண்ணாடி அணியாத காரணத்தாலும் ஸ்பென்சர், ஆரம்பத்தில் அங்கிருந்த விலங்குகளை குரங்குகள் என்று நினைத்துள்ளார். ஆனால் அருகில் சென்றதும் தான், அது சுமார் 20 நீர்நாய்களைக் கொண்ட குழு என்றும், அவற்றின் நடுவில் பல குட்டிகள் இருப்பதையும் அவர் கண்டறிந்தார். இந்த நேரத்தில் ஒரு ஓட்டப்பந்தய வீரர் அருகிலுள்ள பாதையிலிருந்து அந்த உயிரினங்களை நோக்கிச் சென்று, நேராக விலங்குகள் இருந்த பகுதியை கடந்து சென்று ஜார்ஜ் இருந்த இடத்தையும் கடந்து சென்றுவிட்டார்.

ஆனால் அந்த ஓட்டப்பந்தய வீரர் அவைகளை கடந்து சென்றது அந்த குட்டிகளை பாதுகாத்து நின்ற நீர்நாய்களை சீண்டியுள்ளது. ஆனால் அந்த இடத்தை ஓட்டப்பந்தய வீரர் கடந்து சென்ற நிலையில் கோபமடைந்த நீர்நாய்கள் அருகிலிருந்த ஜார்ஜை கூட்டமாக தாக்க தொடங்கின. சுமார் 10 நொடிகள் இந்த தாக்குதல் நீடித்ததாக ஜார்ஜ் விவரித்தார். அவரது முகத்தை மட்டும் முடிகொண்ட அவருக்கு கால் முழுவது நீர்நாய் கடிகள் ஏற்பட்டன. இறுதியாக விரைந்து வந்த அவரது நண்பர் அந்த நீர்நாய்களை கத்தி பயமுறுத்தி ஓடவைத்துள்ளார். அவர் தாமதித்திருந்தால் ஜார்ஜ் உயிர்போகும் அளவுக்கு கூட அந்த நீர்நாய்களால் தங்கியிருக்க முடியும் என்று கூறப்படுகிறது.

உடனடியாக அவர்கள் அருகிலுள்ள பார்வையாளர் மையத்தை அடைந்தனர், அங்கு தனது இடைவேளையிலிருந்து திரும்பிய ஒரு காவலர் சில Bandageகளை அவருக்கு வழங்கினார். அதன் பிறகு அவர் மருத்துவமனைக்கு சென்றார் அங்கு அவருக்கு டெட்டனஸ் ஊசி மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் கொடுக்கப்பட்டன. அவரது சில காயங்களுக்கும் தையல் போட வேண்டியிருந்தது, அப்போது தான் அவரது உடலில் 26 காயங்கள் இருந்தது தெரியவந்தது. இதுவரை, ஸ்பென்சர் சிகிச்சைக்காக மருத்துவரை மூன்று முறை சந்தித்து, மருத்துவக் கட்டணமாக 1,200 வெள்ளி செலவிட்டுள்ளார். டிசம்பர் 13 அவர் மீண்டும் UK செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஸ்பென்சர், தாவரவியல் பூங்காவில் உள்ள ஊழியர்கள், எதிர்காலத் தாக்குதல்களைத் தடுக்க அந்தப் பகுதியைச் சுற்றி முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற தனது வேண்டுகோள்களில் ஊழியர்கள் “ஆர்வம் காட்டவில்லை” என்று கூறினார். அதிகாரிகள் போதுமான அளவு செயல்படவில்லை என்பதால் அவர் தனக்கென ஒரு சிங்கப்பூர் வழக்கறிஞரை நியமிக்க முடிவு செய்துள்ளார். மேலும் டிசம்பர் 9 அன்று, NParks ஊழியர் ஒருவர் தனது மருத்துவக் கட்டணங்களுக்கு S$900 இழப்பீடாக தருகிறோம் என்று கூறி பேசியதாகவும், அதை தான் மறுத்துவிட்டதாகவும் ஸ்பென்சர் கூறினார்.

அவருடைய மருத்துவக் கட்டணங்களுக்கான செலவை அவரது காப்பீடு ஈடுசெய்கிறது என்று கூறிய அவர், இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க ஆவணம் செய்யவேண்டும் என்று கூறினார். இந்த செய்தி இணையத்தில் வெளியான நிலையில் ஆரம்பத்தில் அந்த நீர்நாய்களை ஆக்ரோஷமடையச்செய்த அந்த ஓட்டப்பந்தய வீரரை பலரும் விமர்சித்து வருகின்றனர்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts