TamilSaaga

‘தடுப்பூசி போட்டிருந்தாலும் இரண்டு பேருக்கு தான் அனுமதி’ – KFC, பர்கர் கிங் உள்ளிட்ட நிறுவங்கள் முடிவு

சிங்கப்பூரில் தற்போது பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்ட பட்சத்தில் அதிகபட்சமாக ஐவர் வரை குழுவாக அமர்ந்து உண்ணலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் பர்கர் கிங், KFC மற்றும் சப்வே போன்ற உணவுக்கடைகள் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்ட பட்சத்திலும் இருவர் மட்டுமே தங்களின் கடைகளுக்குள் குழுவாக அமர்ந்து உணவு உட்கொள்ள முடியும் என்று தற்போது தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு நடவடிக்கைகளை கருத்தில் கொண்டே இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அந்நிறுவனங்கள் தங்கள் சமூகவலைத்தளங்களில் தெரிவித்துள்ளது. Burger King, KFC, Subway, Long Joh, Arnold’s Fried Chicken போன்ற பல நிறுவங்கள் இந்த முடிவை எடுத்துள்ளது.

Related posts