சிங்கப்பூரில் WorkPermit, Epass, Spass பொதுவாக தொழிலாளர்களுக்காக வழங்கப்படும் பெர்மிட்டுகள். ஆனால் செப்டம்பர் 1,2023 முதல் நடைமுறைக்கு வந்தது தான் இந்த என் Non-Traditional Sources (NTS) Permit.
NTS permit சிங்கப்பூரில் புதிய வகை வேலை அனுமதி ஆகும், இது குறிப்பாக தொழில்நுட்ப மற்றும் குறிப்பிட்ட துறைகளில் சிறப்பான திறமைகள் கொண்ட பணியாளர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பெர்மிட்டின் கீழ் வேலை செய்ய தகுதியானவர்கள் மற்றும் சம்பளம் என்ன என்ற முழு விவரத்தை தான் இந்த பதிவில் தெரிந்துகொள்ள போகிறோம்.
Manufacturing and Service துறைகளின் கீழ், NTS பெர்மிட்டின் மூலம் பல்வேறு தொழில்களில் பணியாளர்களை பணியில் சேர்க்கலாம். அதாவது சிங்கப்பூரில் உள்ள ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரெண்ட் இருக்கு பணிபுரிய தேவையான மற்றும் மற்ற பணிக்கு தேவையானவர்களை இந்த பெர்மிட்டின் கீழ் பணிக்கு அமர்த்தலாம். அதுமட்டுமல்லாமல் சீட் மெட்டல் ஒர்க், வெல்டிங், மெட்டல் மோல்டிங் ஒர்க், ஸ்ட்ரக்சுரல் மெட்டல் ஒர்க் போன்ற இந்த பெர்மிட்டின் கீழ் ஆட்களை எடுக்கலாம்.
யார் விண்ணப்பிக்கலாம்?
ஆனால் இந்த பெர்மிட்டின் கீழ் குறிப்பிட்ட நாடுகளை சேர்ந்தவர்களை மட்டுமே வேலைக்கு எடுக்கலாம் என MOM நிபந்தனை விதித்துள்ளது.
- Bangladesh
- India
- Myanmar
- Philippines
- Sri Lanka
- Thailand
போன்ற நாடுகளை சேர்ந்தோர் இந்த பெர்மிட்டுக்கு அப்ளை செய்யலாம்.
இந்த பெர்மிட்டின் கீழ் வேலைக்கு சேருவோருக்கு குறைந்தபட்சம் 2000 சிங்கப்பூர் டாலர் ஃபிக்சட் சம்பளம் வழங்கப்பட வேண்டும். மேலும் பெர்மீட்டில் என்ன வேலை கொடுக்கப்பட்டுள்ளது அந்த வேலைக்கு தான் நபர்களை அழைத்து வர வேண்டும். இந்திய ரூபாயின் படி பார்த்தால் ஒரு லட்சத்து இருபதாயிரம் சம்பளம் இந்த பெர்மிட்டின் கீழ் வழங்கப்பட வேண்டும்.
சிங்கப்பூரில் இருக்கும் இந்தியன் ரெஸ்டாரண்டுகளில் குக் வேலைக்கு செய்பவர்கள் இதற்கு கீழ் அப்ளை செய்யலாம். உணவு தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு செல்பவர்கள் இதன் கீழ் அப்ளை செய்யலாம். எடுத்துக்காட்டாக வெஜிடபிள் சாஸ் தயாரிப்பவர்கள், ஊறுகாய் போன்றவை தயாரிக்கும் தொழில். உணவு தொழிற்சாலைகளிலேயே சூப்பர்வைசர், பேக் செய்பவர்கள் போன்றவர்கள் இந்த வேலையின் கீழ் அப்ளை செய்ய முடியாது. சிங்கப்பூரில் இருக்கும் இந்திய உணவகங்கள் இந்தியா, பங்களாதேஷ் மற்றும் இலங்கையைச் சேர்ந்த சமையல்காரர்களை வேலை அனுமதி நிலையில் NTS Permit கீழ் நியமிக்க முடியும்.
NTS வேலை பட்டியல்:
- உணவு தயாரிக்கும் நிறுவன ஊழியர்கள்
- Food processing supervisor
- Food Bakers
- Cooks and confectionery maker
- அங்கீகரிக்கப்பட்ட பெற்ற ஹோட்டல்களில் வீட்டு பராமரிப்பு தொழிலாளர்கள் (Housekeeping workers) மற்றும் போர்ட்டர்கள் (porters) இதன் கீழ் அப்ளை செய்யலாம்.
- பொது உற்பத்தியாளர்கள், துல்லிய பொறியியல், போக்குவரத்து பொறியியல், வாகன நிறுவனங்கள் போன்ற உற்பத்தி நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள்:
- Sheet metal workers
- Welders and flame cutters
- Metal moulders and coremakers
- Riggers and cable splicers
- Structural metal preparers and erectors
MOM (மனிதவள அமைச்சகம்) NTS தொழில்கள் பட்டியலை காலத்திற்கேற்ப மறுஆய்வு செய்யும்.
NTS Permit விண்ணப்ப செயல்முறை:
NTS பெர்மிட்டுக்கு விண்ணப்பிக்க, நீங்கள் ஒரு சிங்கப்பூர் நிறுவனத்தால் நியமிக்கப்பட வேண்டும். நிறுவனம் உங்கள் பெயரில் விண்ணப்பித்து, தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
தேவையான ஆவணங்கள்: பாஸ்போர்ட், கல்விச் சான்றிதழ்கள், வேலை அனுபவ சான்றிதழ்கள் போன்ற தேவையான ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்.
விண்ணப்பதாரர் விவரங்கள்: உங்கள் தனிப்பட்ட விவரங்கள், கல்வித் தகுதி, வேலை அனுபவம் மற்றும் சம்பள விவரங்கள் போன்றவற்றை விண்ணப்பத்தில் சேர்க்க வேண்டும்.
MOM (Ministry of Manpower) உங்கள் விண்ணப்பத்தை சரிபார்த்து, தேவையான ஆவணங்களை சரிபார்க்கும். உங்கள் தகுதிகள் மற்றும் முதலாளியின் தகவல்கள் சரியாக இருக்கிறதா என்பதை உறுதி செய்யும்.
NTS பெர்மிட், சிங்கப்பூரில் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாகும். ஆனால், இந்த பெர்மிட்டைப் பெறுவதற்கு குறிப்பிட்ட தகுதிகள் மற்றும் தேவைகள் இருப்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.
சிங்கப்பூர் S Pass வேலை வாய்ப்பு பற்றிய அடிப்படை தகவல்கள்: விண்ணப்பிக்கும் முறை