சிங்கப்பூரில் பானாசோனிக் நிறுவனம் 700 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்யவுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, சிங்கப்பூரில் பானாசோனிக் நிறுவனம் அதன் குளிர்சாதன அமுக்கி உற்பத்தி (refrigeration compressors) நடவடிக்கைகளை மூடுவதற்கு அது தற்போது முடிவுசெய்துள்ளது. இதற்கு “சவாலான உலகளாவிய வணிகக் கண்ணோட்டம்” மற்றும் பானாசோனிக்கின் “குளிர்பதன அமுக்கி வணிக போர்ட்ஃபோலியோவின் நீண்டகால வணிக மூலோபாய மதிப்பாய்வு” காரணமாகும் என்று அந்த ஜப்பானிய நிறுவனம் கடந்த வியாழக்கிழமை (செப்டம்பர் 23) அன்று வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட பிரிவின் செயல்பாடுகள் அடுத்த ஆண்டு செப்டம்பர் இறுதியில் நிறுத்தப்படும். பணிநீக்கங்கள் சிங்கப்பூரில் அதன் பணியாளர்களில் மூன்றில் ஒரு பங்கைக் குறிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. பானாசோனிக் நிறுவனம் மலேசியா மற்றும் சீனாவில் இருக்கும் வசதிகளுக்கு அமுக்கி உற்பத்தி நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் என்று கூறியுள்ளது. இதுகுறித்து மேலாக்காவில் உள்ள மலேசிய தொழிற்சாலையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
நிறுவனத்தின் குளிர்சாதன அமுக்கி வணிகத்தின் தலைமையகமாக இருக்கும் சிங்கப்பூரில் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை தொடர்ந்து செயல்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. “சிங்கப்பூரில் உள்ள பானாசோனிக் குழு பல்வேறு வணிகங்களில் 1,400-க்கும் மேற்பட்ட ஊழியர்களை தொடர்ந்து பணிபுரிவார்கள் என்றும், இதில் உயர் மதிப்பு உற்பத்தி, ஆர் & டி மற்றும் எங்கள் ஆசிய பசிபிக் தலைமையகம் ஆகியவை அடங்கும்,” என்று அது கூறியது.
இந்நிலையில் ஆட்குறைப்பு செய்யப்பட்ட Panasonic நிறுவனத்தில் பணியாற்றி தற்போது வேலையிழந்த நிறுவனத்தின் ஊழியர்கள் அனைவருக்கும் சிங்கப்பூரின் தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் மற்றும் (NTUC) மின்னணுவியல், மின்சாரத் தொழிற்துறைகளின் ஐக்கிய ஊழியர்கள் சங்கமும் இணைந்து தங்களது ஆதரவை அளிக்கும் என்று சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.