TamilSaaga

சிங்கப்பூர் பாஸ்போர்ட்டுக்கு இனி MyICA app-ல் விண்ணப்பிக்கலாம்.. விசாவையும் நீட்டிக்கலாம் – மிக முக்கிய அறிவிப்பு

சிங்கப்பூரில் பொதுமக்கள் MyICA மொபைல் அப்ளிகேஷன் மூலம் NRICs மற்றும் பாஸ்போர்ட்டுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் இந்த ஆண்டுக்குள் visit passes-களை நீட்டிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்கள், long-term visit passes மற்றும் student’s passes உள்ளிட்டவை டிஜிட்டல் முறையில் விண்ணப்பிக்க Immigration and Checkpoints Authority (ICA) அனுமதிக்கிறது.

வியாழன் (மார்ச் 3) தனது அமைச்சகத்தின் விநியோகக் குழு விவாதத்தின் போது, “அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்படுவதால், முக்கியமான ஆவணங்களை இழப்பதைப் பற்றி நாங்கள் இனி கவலைப்பட வேண்டியதில்லை” என்று உள்துறை அமைச்சகத்தின் இரண்டாவது அமைச்சர் ஜோசபின் தியோ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மேலும் படிக்க – “Bra” அணியாமல் சாலையோரத்தில் தைரியமாக உணவு விற்கும் இளம்பெண் – “கவனமாக” இருக்க போலீசார் எச்சரிக்கை

“இந்த டிஜிட்டல் முறை மூலம், ICA-க்கு நேரில் சென்று ஆவணங்களை சேகரிக்கும் நேரம் மிச்சப்படுகிறது.

ஆயினும்கூட, ICs மற்றும் பாஸ்போர்ட்கள் physical ஆவணங்களாகவே இருக்கும், ஏனெனில் தற்போதைய சட்டத்தின்படி ICs சில அமைப்புகளில் physical ஆவணங்களாக வழங்கப்பட வேண்டும், அதே நேரத்தில் பாஸ்போர்ட்டுகள் சர்வதேச தரத்தை கடைபிடிக்க வேண்டும்.

மேலும், டிஜிட்டல் மயமாக்கல் மூலம், ஒருவரை ஒருவர் தேவையில்லாமல் தொடும் சூழல் உருவாவது தவிர்க்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ICA அலுவலகத்தில் பெரும்பாலான சிங்கப்பூர் வாசிகள், நீண்ட கால பாஸ் வைத்திருப்பவர்கள் மற்றும் பார்வையாளர்கள், பயணிகள் கூடங்களில் தானியங்கி பாதைகள் மூலம் அவர்களது பணிகள் விரைந்து முடிக்கப்படும். இதனால், பணிகள் வேகமாகவும், திறமையாகவும், மிகவும் பாதுகாப்பாகவும் இருக்கும் என்றும் அமைச்சர் ஜோசபின் தியோ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts