TamilSaaga

விடிவு காலம் பொறந்தாச்சு! நாளை (ஏப்.1) முதல் “Entry Approval” இல்லாமல் சிங்கப்பூர் வரலாம் – Pre Departure Test மட்டும் போதும்

சிங்கப்பூரின் பெருந்தொற்று நிலை குறித்து கடந்த மார்ச் 24ம் தேதி பேசிய நமது பிரதமர் லீ, சில முக்கிய தளர்வுகளை அறிவித்தார்.

அதன்படி, இனி முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகள், 12 வயது மற்றும் அதற்குக் குறைவான வயதுடைய குழந்தைகள், இன்று (மார்ச் 31) இரவு 11.59 மணி முதல் சிங்கப்பூருக்கு புறப்படுவதற்கு முன் அவர்கள் எடுக்கவேண்டிய “Pre Departure Test மட்டும் எடுத்தாலே சிங்கப்பூருக்குள் நுழையலாம்” என்று அறிவித்தார். ஆகவே இனி Entry Approval பெறவேண்டிய அவசியம் இருக்காது (தனிமைப்படுத்துதலும் இல்லை).

சிங்கப்பூர் அதன் எல்லைகளை மீண்டும் திறப்பதற்கான மிக முக்கியமான நடவடிக்கையில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. இந்திய உள்பட பிற நாட்டு பயணிகள் இனி எந்தவித கவலையும் இல்லாமலும், VTL போன்ற குறிப்பிட்ட விமானங்களை மட்டுமே நம்பி இருக்காமல் சிங்கப்பூர் வர முடியும்.

சிங்கப்பூர் செல்லும் “Air India Express” விமானம்… இனி ‘Night Travel’ கிடையாது – திருச்சியில் இருந்து ‘Morning Flight’-ஆக நேர மாற்றம்!

மேலும் சிங்கப்பூர் வந்திறங்கிய 24 மணி நேரத்திற்குள் ART சோதனை எடுக்க வேண்டியதில்லை. தினசரி சிங்கப்பூர் வருபவர்களின் எண்ணிக்கையில் எந்தவித Quotaகளும் இருக்காது என்றும், Entry Approval இனி அவசியமில்லை என்றும் பிரதமர் லீ அறிவித்தார். Vaccinated Travel Frame Work என்று அழைக்கப்படும் இந்த புதிய விதி VTL சேவைக்கு மாற்றாக அமையும்.

எவ்வாறாயினும், புறப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் நடத்தப்படும் Pre Departure Test அமலில் இருக்கும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. “உள்ளூர் மற்றும் உலகளாவிய கோவிட்-19 சூழ்நிலைகளை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம், மேலும் வரும் வாரங்களில் புறப்படுவதற்கு முந்தைய சோதனைத் தேவையை நீக்குவது குறித்து பரிசீலிப்போம்” என்று MOH தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரின் “மெட்ராஸ் சுவரா” இந்த Keppel Shipyard? – வெளிநாட்டு ஊழியர்களின் உயிரை தொடர்ந்து காவு வாங்குவது ஏன்? – நினைத்தாலே பதற வைக்கும் சம்பவங்கள்

முழுமையாக தடுப்பூசி போடாத நீண்ட கால அனுமதி பெற்றவர்கள் (Long Term Pass Holders) மற்றும் 13 வயது மற்றும் குறுகிய கால பார்வையாளர்கள் (Short Term Pass Holders) சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆனால் தடுப்பூசிகளுக்கு மருத்துவ ரீதியாக தகுதியற்ற நீண்ட கால பாஸ் வைத்திருப்பவர்கள், 13 முதல் 17 வயதுடைய நீண்ட கால பாஸ் வைத்திருப்பவர்கள் மற்றும் குறுகிய கால பார்வையாளர்கள் மற்ற செல்லுபடியாகும் நுழைவு அனுமதி வைத்திருப்பவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும்.

இந்த பார்வையாளர்கள் சிங்கப்பூருக்குப் புறப்படுவதற்கு இரண்டு நாட்களுக்குள் புறப்படுவதற்கு முந்தைய சோதனையை மேற்கொள்ள வேண்டும், ஏழு நாட்கள் தங்கியிருக்கும் அறிவிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும். மேலும் அவர்களின் SHN காலத்தின் முடிவில் (ART) சோதனையை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts