சிங்கப்பூர், சந்தேகத்திற்கு இடமின்றி உலகின் மிகவும் பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். இங்கு டேட்டிங் இரவுகளை விரும்புவோர் அதிகம் உள்ளனர். நீண்ட நேர வேலைக்கு பிறகு வீக்கென்டில் ஹேங்கவுட் செய்ய விரும்பும் தம்பதிகளுக்கு அவர்களின் வேடிக்கையான அனுபவங்கள், இனிமையான நினைவுகளை உருவாக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
Cheap and Best என்ற concept-ஐ விரும்பும் தம்பதிகளுக்கு, சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட ஹவ் பர் வில்லா உள்ளது. இங்கே, அனுமதி இலவசம். கடந்த 1937ல் கட்டப்பட்ட மற்றும் பல ஆண்டுகளாக பல மாற்றங்களுக்கு உள்ளான 8.5 ஹெக்டேர் இடம் நிச்சயம் உங்கள் மனதை ஈர்க்கும் ஒரு பயணமாக இருக்கும். ஒரு புதிய உணவகம் மற்றும் உலகின் முதல் Hell மியூசியம் ஆகியவை இங்கு உள்ளன. கடந்த ஆண்டு அக்டோபர் 28 அன்று இவை திறக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. எனவே நீங்கள் மேம்படுத்தப்பட்ட பல அனுபவத்தை
இங்கு பெறலாம்.
அடுத்ததாக HiRoller இன்டோர் ஸ்கேட்டிங் ரிங்க், இது சிங்கப்பூரின் முதல் உட்புற ஸ்கேட்டிங் ரிங்க் ஆகும். நுழைவு கட்டணம் பெரியவர்களுக்கு $18 (ஸ்கேட் வாடகை உட்பட – இரண்டு மணி நேரத்திற்கு) இருப்பினும் இங்கு வருவதற்கு, நீங்கள் ஒரு ஸ்லாட்டை முன்பதிவு செய்ய வேண்டும் – தற்போதைய கோவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக ஒரு டைம் ஸ்லாட்டில் அதிகபட்சமாக 50 பேர் மட்டுமே இருக்க முடியும். மேலும் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட நபர்கள் மட்டுமே நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்ததாக Rain Forest Lumina, சிங்கப்பூர் மிருகக்காட்சிசாலையை இரவில் நேரத்தில் காணக்கூடிய அம்சங்கள் இங்கு உண்டு. இரவு நேரத்தில் செல்லக்கூடிய ஒரு 1 கிமீ நீள நடைப்பயணத்தை அடிப்படையாக கொண்ட இந்த இடத்தில் திகைப்பூட்டும் மல்டிமீடியா ஒளி மற்றும் ஒலி நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றது. மேலும் பார்வையாளர்கள் பாப் தி ஓட்டர் நடத்தும் டிஜிட்டல் இடியுடன் கூடிய மழை, கண்கவர் லேசர் காட்சிகள் மற்றும் ஷிம்மரிங் தீவுகளில் விளக்குகளின் கடல் ஆகியவற்றை இங்கு காணலாம்.
Splat Paint House, உங்களுக்குள் ஒளிந்திருக்கும் கலை ஆர்வத்தை உங்கள் துணையுடன் வெளிக்கொணர ஒரு சிறந்த இடமாக இது திகழ்கின்றது. இங்கு செல்ல இரண்டு ஸ்டார்டர் பேக்கேஜ்கள் உள்ளன. நீங்கள் உள்ளே செல்லும்போது வண்ணப்பூச்சுகள் மற்றும் ஒரு பெரிய கேன்வாஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய தொகுப்புகள் வழங்கப்படும் (இரண்டு நபர்களுக்கு $115). அதை பெற்றதும் உங்கள் கலை ஆர்வத்தை நீங்கள் கண்கவர் ஓவியங்களால் அலங்கரிக்கலாம்.