TamilSaaga

ஜனவரி 20 முதல் சர்க்கிள் லைனில் கொண்டு வரப்படும் மாற்றம்… பயணிகளுக்கான மாற்று வழித்தடங்கள் என்னென்ன?

சிங்கப்பூரில் எம் ஆர் டி சர்க்கிள் லைனில் ஹார்பர் ஃபிரண்ட், தெலுக் பிலாங்கா ஆகிய நிலையங்களில் ஜனவரி 2ம் தேதி முதல், மே 24 ஆம் தேதி வரை தலா ஒரு1 தள மேடை மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தண்டவாள ஒருங்கிணைப்பு பணிகளுக்காக மேடைகள் மூடப்படுவதாக ஜனவரி 16ஆம் தேதி அன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் சிங்கப்பூரின் நிலப் போக்குவரத்து ஆணையம் மற்றும் எஸ் எம் ஆர் டி நிறுவனம் அறிவித்துள்ளது.

சர்க்கிள் ரயில் பாதையை ஆறாவது கட்டமாக நீட்டிக்கும் பணியானது தற்பொழுது நடைபெற்று வருகின்றது. இதில் புதிதாக அமைக்கப்படும் மூன்று நிலையங்கள் 2026 ஆம் ஆண்டில் செயல்பட தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேடைகள் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் நிலையில் ஹெண்ட்ரிஜ்- லாப்ரடோர் பார்க் இணையங்களுக்கு இடையே பத்து நிமிட இடைவெளியில் ரயில் சேவை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ரயில் சேவை எந்தெந்த நிலையத்திற்கு வரும் என்பது குறித்த தகவல்கள் குறிப்பிட்ட பிளாட்பார்மில் வைக்கப்பட்டுள்ளதால் மக்கள் அதனை கவனித்து எங்களை திட்டமிடுமாறு கொள்ளப்படுகிறார்கள்.

அது மட்டுமல்லாமல் பிளாட்பார்ம் மூடப்பட்டிருக்கும் காலத்தில் சர்க்கிள் லைனுக்கு பதிலாக பயணிகள் 10, 30,57,61,93,9,100,143,166,188,963 ஆகிய பொது பேருந்து சேவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றுக்கு இடையே கூடுதலாக E-31 என்ற சேவையும் மூடப்பட்ட தளங்களுக்கு இடையே பயணிகள் எளிதில் பயணிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த விவரங்களை அறிவதற்கு மை ட்ரான்ஸ்போர்ட் எஸ் ஜி செயலியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் எஸ் எம் ஆர் டி யின் இணையதளத்தின் வாயிலாகவும் தெரிந்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts