TamilSaaga

“சிங்கப்பூர் தேசிய தின அணிவகுப்பு” – ஆகஸ்ட் 21ம் தேதி பொது விடுமுறையா? அரசு சொல்வதென்ன

சிங்கப்பூரில் பெருந்தொற்று நிலைமை காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி தேசிய தினத்தன்று நடக்கவேண்டிய தேசிய தின அணிவகுப்பு ஆகஸ்ட் 21 க்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனால் சிங்கப்பூரில் உள்ள பலர் அந்த சனிக்கிழமை பொது விடுமுறையாக இருக்குமா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். அவர்க்ளின் கேள்விக்கு பதில் இல்லை என்பதேயாகும்.

மனிதவள அமைச்சகத்தின் வலைத்தள அறிவிப்பின்படி, வரும் சனிக்கிழமை ஆகஸ்ட் 21, பொது விடுமுறையாக இருக்காது என்று தெரிவித்துள்ளது. மேலும் அடுத்தபடியாக சிங்கப்பூரில் பொது விடுமுறை என்பது வரும் நவம்பர் மாதம் 4ம் தேதி தீபாவளி அன்று அளிக்கப்படும்.

நமது சிங்கப்பூரில் பெருந்தொற்று காரணமாக இரண்டாவது வருடமாக தேசிய தின அணிவகுப்பு தடைபடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆகஸ்ட் 9 திங்கள்கிழமை அன்று பெரிய அளவில் கொண்டாட்டங்கள் இன்றி 600 பங்கேற்பாளர்களுடன் தேசிய தின சடங்குபூர்வ அணிவகுப்பு நடந்தது.

மேலும் தேசிய தின உரையும் வரும் ஆகஸ்ட் 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts