சிங்கப்பூரில் 1,000க்கும் மேற்பட்ட மோசடிகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 296 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் சுமார் 6.4 மில்லியன இழந்துள்ளனர் என்பது தான் திடுக்கிடும் தகவலாக உள்ளது. அந்த சந்தேக நபர்கள், 16 முதல் 80 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், அவர்கள் மோசடி செய்பவர்கள் அல்லது பணம் கொள்ளையடிப்பவர்கள் என நேற்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 5) இரவு போலீசார் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இணைய வழி காதல், இ-காமர்ஸ், அரசு அதிகாரி என்ற பெயரில் ஆள்மாறாட்டம், வேலை மற்றும் கடன் ஆகிய வகைகளில் மோசடிகள் நடந்துள்ளனர். இரண்டு வார நடவடிக்கையை மேற்கொண்ட பின்னர் 194 ஆண்களும் 102 பெண்களும் அக்டோபர் 22 மற்றும் நவம்பர் 5-க்கு இடையில் கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்கள் மோசடி செய்தல், பணமோசடி செய்தல் அல்லது உரிமம் இல்லாமல் பணம் செலுத்தும் சேவைகளை வழங்குதல் போன்ற குற்றங்களுக்காக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மோசடியில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
பணமோசடி செய்த குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, 5,00,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். கட்டணம் செலுத்தும் சேவையை வழங்கும் உரிமம் பெறாத வணிகத்தை மேற்கொள்வதற்கான குற்றவாளிகளுக்கு 1,25,000 வரை அபராதம், மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
இதுகுறித்து காவல்துறை கூறியது: “குற்றங்களுக்கு உடந்தையாக இருப்பதைத் தவிர்க்க, உங்கள் வங்கிக் கணக்கு அல்லது மொபைல் லைன்களைப் பயன்படுத்துவதற்கான பிறரின் கோரிக்கைகளை பொதுமக்கள் எப்போதும் நிராகரிக்க வேண்டும், ஏனெனில் இவை குற்றங்களுடன் இணைக்கப்பட்டால் நீங்கள் பொறுப்புக் கூறப்படுவீர்கள்.” மேலும் தகவலுக்கு, பொதுமக்கள் www.scamalert.sg ஐப் பார்வையிடலாம் அல்லது 1800-722-6688 என்ற ஊழலுக்கு எதிரான ஹாட்லைனை எண்ணை அழைக்கலாம்.