சிங்கப்பூரில் கடந்த 2016 முதல் 2020 வரை சுமார் 960 ‘கிக்பேக்’ குற்றங்கள் குறித்து மனிதவள அமைச்சகம் (MOM) விசாரித்ததாக சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ள முகநூல் பதிவில் தெரிவித்துள்ளது. “இந்நிலையில் இந்த நிகழ்வு குறித்து பெறப்பட்ட புகார்களில் மூன்றில் இரண்டு பங்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அளித்த புகார்கள், மூன்றில் ஒரு பங்கு பொது உறுப்பினர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் (அரசு சாரா நிறுவனங்கள்) மற்றும் பிற பொது நிறுவனங்கள் அளித்த புகார்களாகும். அதே நேரத்தில் ஒரு சிறிய எண்ணிக்கையானது MOMன் செயல்திறன்மிக்க ஆய்வுகள் மூலம் கண்டறியப்படுகிறது” என்று குறைப்படுகிறது.
MOM வெளியிட்ட முழுமையான அறிக்கை
‘கிக்பேக்’ என்பது முதலாளிகள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடமிருந்து தங்கள் வேலைக்கான நிபந்தனை அல்லது உத்தரவாதமாக பணம் செலுத்தக் கோருவது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் MOM வெளியிட்ட அறிக்கையில், தொழிலாளர்கள் முன் வந்து இதுபோன்ற வழக்குகளைப் பற்றி புகாரளிக்க ஊக்குவிக்கும் வகையில் பல முன்னெடுப்புகளை செய்துள்ளது.
இதுகுறித்து உதவி தேவைப்படும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் MOMஐ 6438 5122 என்ற எண்ணிலும், அல்லது புலம்பெயர்ந்த தொழிலாளர் மையத்தை 6536 2692 என்ற எண்ணில் அழைக்கலாம். மேலும் இதுபோன்ற KICK BACK விஷயங்களில் முதலாளி மற்றும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் தண்டனை குறித்தும் MOM தெரிவித்துள்ளது.