சிங்கப்பூருக்கு வேலைக்கு வரும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஒவ்வொரு வொர்க் பாஸுக்கு அதற்குரிய சம்பளத்தினை சிங்கை மனிதவளத்துறை நிர்ணயம் செய்து வைத்து இருக்கிறது. அதை அவர்கள் உங்களுக்கு கொடுக்காத பட்சத்தில் உங்களுக்கு MOM தரப்பு உதவியும் செய்யும். அந்த குறிப்பிட்ட தொகையில் இருந்து குறைத்து தரக்கூடாது தானே தவிர அதிகப்படுத்தி கொடுக்கலாம்.
shipyard permit என்பது கப்பல் கட்டுமான பணிகளில் இருப்பவர்களும், pcm permit என்பது தொழிற்சாலைகளில் வேலை செய்வர்களும் தான். இவர்களுக்கு குறைந்தபட்ச தொகையாக அரசு நிர்ணயம் செய்திருப்பது மாதத்திற்கு OTயுடன் 1200 சிங்கப்பூர் டாலர் ஆகும். ஆனால் சிலருக்கு ரூம் வாடகை, மின்சார கட்டணம், தண்ணி செலவு ஆகியவை பிடித்தம் செய்யப்படும்.
skilled test அடித்து சிங்கப்பூர் வருபவர்களுக்கு கம்பெனி தரப்பில் இருந்து மாதம் சம்பளமாக OTயுடன் $1600 சிங்கப்பூர் டாலர் கொடுக்கப்பட வேண்டும். இந்த பெர்மிட்டில் வந்திருப்பவர்களுக்கு சில கம்பெனி சம்பள உயர்வும் கொடுக்கும். நீங்களும் கோர்ஸ் படித்து சம்பளத்தினை உயர்த்த வழி செய்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: சிங்கப்பூருக்கு Skilled testல் வந்தவரா நீங்க… S-passக்கு மாற என்ன செய்யலாம்… எப்படி மாற வேண்டும்? புதிய ரூல்ஸ் சொல்வது என்ன?
படித்துவிட்டு ஒரு டிகிரியுடன் சிங்கப்பூர் வருபவர்கள் s passல் வரலாம். அவர்களுக்கு மாத சம்பளமாக குறைந்தபட்சம் OTயுடன் $3000 சிங்கப்பூர் டாலர் கொடுக்கப்பட வேண்டும். இரண்டு டிகிரி முடித்து விட்டு சிங்கப்பூர் வரும் E-Pass ஊழியர்களுக்கு குறைந்தபட்சமாக $5000 சிங்கப்பூர் டாலர் கொடுக்கப்பட வேண்டும். இந்த சம்பளத்தில் மாற்றம் இருந்தால் உங்க கம்பெனியில் இதுகுறித்து விசாரித்து தெரிந்து கொள்ளுங்கள். மேல் கூறிய தொகை அனைத்தும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது தானே தவிர சில கம்பெனிகள் இதை சரியாக ஃபாலோ செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.